சூரியாவின் வாடிவாசல் படப்பிடிப்பு எப்போது தொடக்கம்? அசத்தல் அப்டேட்!
சென்னை: சூரியாவின் வாடிவாசல் படம் குறித்த அசத்தல் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் சூர்யா. கடைசியாக அவரது நடிப்பில் சூரரைப்போற்று திரைப்படம் வெளியானது.
இதனை தொடர்ந்து ராக்கெட்ரி படத்தில் கேமியோ அப்பியரன்ஸ் கொடுத்துள்ளார் சூர்யா. இந்தப் படம் இன்னும் திரைக்கு வரவில்லை.

இறுக்கட்டத்தில் படப்பிடிப்பு
தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார் சூர்யா. அந்தப் படத்தின் பெயர் இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. அதனை தொடர்ந்து டிஜே ஞானவேல் இயக்கத்திலும் கமிட்டாகி உள்ளார் சூர்யா.

ஜல்லிக்கட்டை மையப்படுத்தி
மேலும் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்திலும் நடிக்கிறார் சூர்யா. இந்தப் படத்தை வி.கிரியேஷன்ஸின் எஸ்.தாணு தயாரிக்கிறார். இப்படம் ஜல்லிக்கட்டு விளையாட்டை மையமாக வைத்து தயாராக உள்ளது.

சூர்யா டபுள் ஆக்ஷன்
இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தில் நடிகர் சூர்யா தந்தை, மகன் என இருவேடங்களில் நடிக்க உள்ளதாக கூறப்படு

செப்டம்பரில் படப்பிடிப்பு
அதாவது வாடிவாசல் படத்தின் ஷூட்டிங் வரும் செப்டம்பர் மாதம் தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது கொரோனா இரண்டாவது அலை குறைய தொடங்கியுள்ள நிலையில் மூன்றாவது அலை தொடங்கும் முன்பாக படப்பிடிப்பை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் விடுதலை ரிலீஸ்
இயக்குநர் வெற்றிமாறன் தற்போது விடுதலை படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் சூரி ஹீரோவாக நடிக்கிறார். விஜய் சேதுபதி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் அடுத்து வாடிவாசல் படத்தை இயக்க உள்ளார் வெற்றிமாறன்.


Click it and Unblock the Notifications











