நான் ரொம்ப நாளைக்கு இருக்க மாட்டேன்: கமலிடம் கூறிய கருணாநிதி

By Siva

சென்னை: நான் ரொம்ப நாள் இருக்க மாட்டேன் என்று திமுக தலைவர் கருணாநிதி கமலிடம் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி தான் 100 ஆண்டுகள் வரை வாழ்வேன் என்று நம்பிக்கையுடன் தெரிவித்தவர். தமிழுக்காகவும், தமிழ் மக்களுக்காகவும் எமனோடும் போராடி வருவேன் என்றவர்.

When Karunanidhi told Kamal, he didnt have much time left

இந்நிலையில் கருணாநிதி பற்றி கடந்த ஆண்டு கமல் ஹாஸன் கூறியதாவது,

நான் சட்டம் என் கையில்(1978) படத்தில் நடித்தபோது இயக்குனர் டி.என். பாலு கலைஞரிடம் என்னை பற்றி பேசியுள்ளார். அந்த படத்தின் 100வது நாள் விழாவில் கலைஞர் அருகே அமரும் வாய்ப்பு கிடைத்தது. நான் எப்பொழுது நல்ல படத்தில் நடித்தாலும் அதை கலைஞருக்கு போட்டுக் காட்ட விரும்புவேன்.

நான் என் படத்தை போட்டுக் காட்டாவிட்டால் ஏன், என்னாச்சு என்று கலைஞர் கேட்கும் அளவுக்கு எங்களுக்கு இடையேயான நெருக்கம் அதிகரித்தது. தசாவதாரம் படத்தை பார்த்த பிறகு என் கன்னத்தை கிள்ளி பாராட்டினார்.

நான் தசாவதாரம் படத்தின் கதையை எழுதியபோது கலைஞர் எனக்கு பல யோசனைகள் வழங்கினார். நான் ரொம்ப நாளைக்கு இருக்க மாட்டேன், ஏன் என்னை சந்கிக்கவில்லை என்று அவரின் பிறந்தநாள் அன்று கேட்டார். அதெல்லாம் நீண்ட நாட்கள் இருப்பீர்கள், நான் கண்டிப்பாக சந்திப்பேன் என்றேன். இதை அவர் என்னிடம் கூறியபோது அவருக்கு வயது 84, தற்போது 94 என்றார் கமல்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X