அரசியல், சினிமா பின்னணி இருந்துமே கிருத்திகா உதயநிதிக்கு இந்த நிலைமையா? #Kaali
Recommended Video

சென்னை: சினிமாவை விட்டு விலகும் ஐடியாவில் இருந்திருக்கிறார் கிருத்திகா உதயநிதி.
ஆணாதிக்கம் மிக்க திரையுலகில் பெண் இயக்குனர்கள் முன்னேறி வருவது என்பது எளிதான விஷயம் அல்ல என்பதையே தற்போது படம் இயக்கி வரும் பெண்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு கிருத்திகா உதயநிதியும் விதிவிலக்கு அல்ல. அரசியல், சினிமா பின்னணி இருந்தும் அவர் பாடுபட்டுள்ளார்.

கதை
விஜய் ஆண்டனியை பார்த்து கிரைம் த்ரில்லர் கதையை கூறியுள்ளார் கிருத்திகா. அவர் அந்த கதையில் நடிக்க மறுத்துவிட்டார். ஏற்கனவே காளி படத்தில் தனுஷ் நடிக்க மறுக்க, பின்னர் விஜய் ஆண்டனியும் முடியாது என்றதால் விரக்தி அடைந்த கிருத்திகா தொழிலை மாற்றிவிடலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்.

பெண் இயக்குனர்
முயன்று முயன்று தோற்ற விரக்தியில் இருந்துள்ளார் கிருத்திகா. ஒரு படம் மட்டுமே எடுத்துள்ள பெண் இயக்குனருக்கு தயாரிப்பாளர், நடிகர் கிடைப்பது கஷ்டம். அதனால் பல காலம் காத்திருக்க வேண்டியதாக இருந்தது என்கிறார் கிருத்திகா.

காளி
விரக்தியில் இருந்த கிருத்திகா கடைசி முயற்சியாக மீண்டும் விஜய் ஆண்டனியை அணுகி காளி கதையை சொல்ல அவர் ஓகே சொல்லியுள்ளார். அதன் பிறகே கிருத்திகாவுக்கு தன்னம்பிக்கை வந்துள்ளது.

ஆணாதிக்கம்
நாம் இன்னும் ஆணாதிக்கம் மிக்க சமூகத்தில் தான் உள்ளோம். ஒரு பெண் தனது திறமையை வெளிப்படுத்தி, நிரூபிப்பது கடினம். பெண் இயக்குனர் எப்படி ஆக்ஷன் காட்சிகளை எடுப்பார், சீரியஸ் காட்சிகளை எடுப்பார் என்று இன்னும் சந்தேகப்படுகிறார்கள் என்று கிருத்திகா தெரிவித்துள்ளார்.

தமிழ்
பிற துறைகளில் பெண்கள் முன்னேறிவிட்டனர். ஆனால் தமிழ் திரையுலகில் அப்படி இல்லை. சுதா கொங்கரா போன்று சில இயக்குனர்கள் வந்து மற்றவர்கள் பெண்களை பற்றி நினைப்பது தவறு என்று நிரூபித்தால் மட்டுமே நிலைமை மாறுகிறது என்று கிருத்திகா தெரிவித்துள்ளார். கிருத்திகா இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள காளி படம் இன்று ரிலீஸாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











