பாரில் ட்ரங்கன் மங்கி டான்ஸ் - சிக்கிய பிக் பாஸ் ஜோடி! அப்படியா சேதி!
சென்னை: பிக்பாஸ் 2 புகழ் காதல் ஜோடி மகத் யாஷிகா இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்கின்றனர். அறிமுக இயக்குனர்கள் மகேஷ் மற்றும் வெங்கடேஷ்(மக் -வெங்) இயக்கும் இந்த படம் ஹாரர் த்ரில்லர் கதையாம்.
விஜய் டிவி புகழ் மா.கா.பா. ஆனந்த், மனோபாலா, சாரா வெங்கடேஷ் ஆகியோர் தமனின் பார் பாடலுக்கு ரிகர்சலில் ஈடுபட்டிருந்தனர். நம்மிடம் பேசிய இயக்குனர் வெங்கடேஷ், இப்பாடல் வழக்கமான காதல் தோல்வியோ அல்லது சிறப்பான நேரத்தை குறிக்கும் பப் பாடல் போன்று இல்லாமல் நண்பர்களான மகத், யஷிகா, மா.கா.பா. ஆனந்த், மனோபாலா மற்றும் சாரா வெங்கடேஷ் அறிமுகத்தை குறிக்கும் கலர்புல் மற்றும் கொண்டாட வேண்டிய பாடல் என்றார்.

இப்பாடலை நடிகர் சிம்பு பாடியிருக்கிறார். "ட்ரங்கன் மங்கி டான்ஸ்" பாடலின் நடன அசைவுகள் இளைய தலைமுறையை ஈர்க்க கூடியதாக இருக்கும் என்று இயக்குநர் வெங்கடேஷ் கூறினார்.
மற்றுமொரு இயக்குனர் மகேஷ் கூறுகையில் இப் படத்தில் மகத் மற்றும் யஷிகா நடிப்பதால் பெறும் எதிர்பார்ப்பு கூடியுள்ளது. இப்படம் காதல் மற்றும்
நட்பையும் தாண்டி சமுதாயத்திற்கு விழிப்புணர்வை ஊட்டக் கூடியதாக இருக்கும். தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் ரிலீஸ் செய்ய இருப்பதால் சென்னை மற்றும் பெங்களூருவில் படப்பிடிப்பு நடந்து வருகிறது என்றார்.

நடன இயக்குனர் ஹரி கிரண் இந்த பாடலைப் பற்றியும் நடனத்தைப் பற்றியும் பகிர்ந்து கொண்டார். நான் 23 வருடங்களாக நடனம் ஆடுகிறேன் ராஜு சுந்தரம் சாரிடம் பணி புரிந்துள்ளேன். தமிழில் எனக்கு இரண்டாவது படம். இந்த பப் பாடல் எளிய நடன அசைவுகள் கொண்டிருந்தாலும் மிகவும் கலர்புல்லாக இருக்கும். இதில் வரும் ஒரு சிக்னேச்சர் ஸ்டெப் இளைய தலைமுறைகளிடம் மிகவும் பிரபலமாகும் என்றார்.
இது எனக்கு 5 வது படம். முதன் முதலாக த்ரில்லர் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறேன் என்றார் ஒளிப்பதிவாளர் சூரஜ் நல்லுசாமி, . படம் முழுவதும் கிரே மற்றும் நீல கலர் மட்டுமே கொடுத்துள்ளேன். இந்த பப் பாடல் மட்டுமே பல்வேறு கலரில் இருக்கும் என்றும் கூறினார்.
மகத் மற்றும் யஷிகா பிக் பாஸிற்கு பிறகு ஜோடி சேர்வதால் செம ஜாலியாக உள்ளனர். முதலில் எதிர்மறையாக வந்து பின்பு நல்ல ஹீரோவாக மாறுகிறாராம் மகத். மனோபாலா 90's கிட்ஸ் போன்று வந்து கலக்குகிறார். மா கா பா ஆனந்த் மகத்தின் நண்பர். மொத்தமா சமுதாயத்திற்கு ஏதோ சொல்ல வருகிறார்கள் பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











