Manobala: சிவகார்த்திகேயனை ஸ்டேஜிலேயே அடித்த மனோபாலா.. இதெல்லாம் பார்த்தா தாங்க முடியாது!

சென்னை: ரஜினிகாந்த், விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ் தொடங்கி சிவகார்த்திகேயன் வரை பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள மனோபாலாவின் மறைவு தமிழ் சினிமாவுக்கே பேரிழப்பாக மாறி உள்ளது.

இயக்குநர் பாரதிராஜாவின் மாணவரான மனோபாலா மரணத்தால் பெரும் துயரில் ஆழ்ந்துள்ளார் பாரதிராஜா.

When Manobala hits Sivakarthikeyan on stage? a memorable throwback video

#Manobala ஹாஷ்டேக்கை ரசிகர்கள் டிரெண்ட் செய்து மனோபாலாவின் மறக்க முடியாத த்ரோபேக் வீடியோக்களை ஷேர் செய்து ரசிகர்களை கலங்கடித்து வருகின்றனர்.

சிஷ்யனை இழந்து தவிக்கும் குரு: பாரதிராஜா இயக்கத்தில் வெளியான புதிய வார்ப்புகள் படத்தில் தான் அறிமுகமானார் மனோபாலா. பாரதிராஜாவின் உதவி இயக்குநராக இருந்து சினிமா நுணுக்கங்களை கற்றுக் கொண்டு அவரும் இயக்குநராக தமிழ் சினிமாவில் வலம் வந்தார்.

இந்நிலையில், மனோபாலாவின் மரண செய்தி இயக்குநர் பாரதிராஜாவை மேலும், வேதனையில் ஆழ்த்தி உள்ளது. தனக்கு முன்னாடி தனது சிஷ்யன் சென்று விட்டானே என மன வேதனையில் குமுறி வருகிறார்.

டிரெண்டாகும் ஹாஷ்டேக்: #Manobala ஹாஷ்டேக்கை பதிவிட்டு ரசிகர்கள் மனோபாலாவின் பிரபலமான கமெடி காட்சிகளை பதிவிட்டு இனிமேல் இப்படி நம்மை சிரிக்க வைக்க ஒருத்தர் பிறக்கப் போவது இல்லை என வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

When Manobala hits Sivakarthikeyan on stage? a memorable throwback video

சந்திரமுகி, அரண்மனை, காஞ்சனா, கலகலப்பு, யாரடி நீ மோகினி, ரஜினி முருகன் என பல படங்களில் தனது காமெடி காட்சிகளால் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர் மனோபாலா.

சிவகார்த்திகேயனை ஸ்டேஜிலேயே அடித்தார்: ரஜினி முருகன் பட விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசிக் கொண்டிருந்த போது மனோபாலா செல்லமாக அவரை அடிக்கும் காட்சிகளை தற்போது சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

மனோபாலா பற்றி சிவகார்த்திகேயன் சொன்ன வார்த்தை: ரஜினி முருகன் படத்தில் ஆடி ஷோரூம் ஓனராக மனோபாலா நடித்திருப்பார். அப்போ ஆடி ஷோரூம் எப்படி இருக்கும்னு பாருங்க.. மற்ற நடிகர்கள் போல 4 சீன் இல்லையா? 5 சீன் இல்லையா? என்றெல்லாம் கேட்க மாட்டார்.

தம்பி.. இந்த ஒரு சீனை எந்தளவுக்கு பிரம்மாதமா பண்ண முடியுமோ பண்ணி கலக்கிடுவோம் என மனோபாலா வாய்ஸிலேயே சிவகார்த்திகேயன் மேடையில், பேச பக்கத்தில் அமர்ந்திருந்த மனோபாலா சிவகார்த்திகேயனை செல்லமாக அடிக்க, அண்ணே உங்க வாய்ஸ் தான் ஈஸியா வருது பேசிக்கிறேன் என சிவகார்த்திகேயன் பதில் கவுன்ட்டர் கொடுக்கும் அலப்பறைகளை எல்லாம் இனிமேல் பார்க்க முடியாதே என ரசிகர்கள் அழுது புலம்பி வருகின்றனர்.

நடிகர் சிவகார்த்திகேயன் ட்விட்டரில் இருந்து தற்காலிகமாக விலகிய நிலையில், அவர் சார்பாக அவரது ரசிகர்கள் மனோபாலாவுக்கு இரங்கல் ட்வீட்களை பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X