இயக்குனர் சொல்லச் சொல்ல கேட்காமல் மோகன்லால் செய்த காரியம்
Recommended Video

திருவனந்தபுரம்:ஒடியான் பட இயக்குனர் ஸ்ரீகுமார் சொல்லியும் கேட்காமல் மோகன்லால் ஒரு விஷயம் செய்துள்ளார்.
ஸ்ரீகுமார் இயக்கத்தில் மோகன்லால் நடித்து வரும் மலையாள படம் ஒடியான். இந்த படத்திற்காக மோகன்லால் தனது எடையை 18 கிலோ குறைத்து ஒல்லியாகியுள்ளார்.
அவர் எடையை குறைத்ததை பார்த்து அவரின் ரசிகர்கள் ஆச்சரியப்படுகிறார்கள்.

ரஜினிகாந்த்
ஒடியான் படத்திற்காக உடல் எடையை வெகுவாக குறைத்துள்ள மோகன்லாலை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளனர். மேலும் பல பிரபலங்களும் மோகன்லாலை பாராட்டியுள்ளனர்.

கிராபிக்ஸ்
ஒடியான் படத்தில் மோகன்லால் மீசை இல்லாமல் வர வேண்டுமாம். கம்ப்யூட்டர் கிராபிக்ஸை பயன்படுத்தி மீசையை நீக்கிவிடலாம் என்று இயக்குனர் ஸ்ரீகுமார் மோகன்லாலிடம் தெரிவித்துள்ளார்.

அடம்
கிராபிக்ஸ் எல்லாம் வேண்டாம் என்று கூறிய மோகன்லால் தனது மீசையை ஷேவ் செய்துவிட்டாராம். ரியலாக தெரியவே மீசையை எடுத்துள்ளார் மோகன்லால். முன்னதாக இருவர் உள்ளிட்ட சில படங்களில் மீசையில்லாமல் அவர் நடித்துள்ளார்.

இயக்குனர்கள்
முன்னதாக எத்தனையோ இயக்குனர்கள் வெயிட்டை குறைக்குமாறு கூறியும் மோகன்லால் கேட்கவில்லை. ஆனால் அவர் ஸ்ரீகுமார் மற்றும் தனது கதாபாத்திரம் மீதான நம்பிக்கையால் தற்போது எடையை குறைத்துள்ளார் என்று அவருக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஜனவரி
ஒடியான் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ஜனவரி மாதம் 5ம் தேதி பாலக்காட்டில் துவங்குகிறது. எடையை குறைக்க பெருமுயற்சி செய்துள்ளதால் மோகன்லாலுக்கு 20 நாட்கள் ஓய்வு அளித்துள்ளதாக ஸ்ரீகுமார் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











