மாதவன் மனைவிக்கு யாரு கிஸ் கொடுக்குறா பாருங்க.. இதை பார்த்ததும் அவரு மச்சானே ஆடிப் போயிட்டாராம்!
சென்னை: நடிகர் மாதவன் இயக்கி நடித்துள்ள ராக்கெட்டரி திரைப்படம் வரும் ஜூலை 1ம் தேதி திரைக்கு வருகிறது.
Recommended Video
தேச துரோகி என தவறாக குற்றம் சுமத்தப்பட்டு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்த விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றைத் தான் படமாக்கி நடித்திருக்கிறார் மாதவன்.
இந்நிலையில், நம்பி நாராயணன் லுக்கில் தனது மனைவியுடன் மாதவன் எடுத்துக் கொண்ட ரொமான்டிக் போட்டோ பலரையும் ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

நம்பி நாராயணன் பயோபிக்
கேன்ஸ் திரைப்பட விழாவில் ராக்கெட்டரி படத்தை ரிலீஸ் செய்து ஸ்டாண்டிங் அவேஷன் பெற்ற நடிகர் மாதவன் வரும் ஜூலை 1ம் தேதி அந்த படத்தை தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய போகிறார். இந்த படத்தை முதல் முறையாக அவரே இயக்கி நடித்துள்ளார். விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாறு படமாக இந்த படம் உருவாகி உள்ளது. மாதவனுக்கு ஜோடியாக இந்த படத்தில் பல ஆண்டுகளுக்கு பின்னர் சிம்ரன் நடித்துள்ளார்.

கேமியோ ரோலில் சூர்யா
விக்ரம் படத்தில் ரோலெக்ஸ் கதாபாத்திரத்தில் கேமியோவாக வருவதற்கு முன்னமே ராக்கெட்டரி படத்தில் ஒரு ரூபாய் சம்பளம் கூட வாங்காமல் நடிகர் சூர்யா கேமியோ ரோலில் நடித்துக் கொடுத்துள்ளார். ராக்கெட்டரி படத்தின் டீசரில் கூட சூர்யாவின் போர்ஷனை இடம்பெற செய்துள்ளார் மாதவன். ஆயுத எழுத்து படத்தில் இருவரும் இணைந்து நடித்த நிலையில், மீண்டும் இருவரும் இணைந்து ராக்கெட்டரி படம் மூலம் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்த உள்ளனர். சூர்யாவை போல நடிகர் ஷாருக்கானும் கேமியோ ரோலில் இந்த படத்தில் நடித்துள்ளார்.

பஞ்சாங்க சர்ச்சை
ராக்கெட்டரி படத்தை எடுத்து பாராட்டுக்களை குவிக்க வேண்டிய நிலையில், பஞ்சாங்கம் தான் மார்ஸ் செல்ல உதவியது என பேசி பெரும் சர்ச்சையில் சிக்கினார் மாதவன். ஏகப்பட்ட ட்ரோல்கள் குவிந்த நிலையில், அதற்கு மன்னிப்பும் கேட்டு ட்வீட் போட்டிருந்தார். ராக்கெட்டரி படம் வெளியான பிறகு அந்த ட்ரோல் எல்லாம் பாராட்டுக்களாக மாறுமா என்பதை வெயிட் பண்ணிப் பார்ப்போம்.

மனைவிக்கு முத்தம்
நம்பி நாராயணனின் வயோதிக லுக்கிற்காக நீண்ட வெள்ளை முடி மற்றும் வெள்ளை தாடியுடன் நடித்த மாதவன் அந்த கெட்டப்புடன் தனது மனைவியுடன் ரொமான்ட்டிக்காக முத்தம் கொடுப்பது போல மூக்கோடு மூக்குரசி எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த பலரும் மாதவன் மனைவிக்கு யாருப்பா முத்தம் கொடுக்கிறான்னே கமெண்ட் போட்டு வருகின்றனர்.

மிரண்டு போன மச்சான்
தனது மனைவி சரிதாவின் தம்பிக்கு இந்த போட்டோவை முதலில் அனுப்பியதும், அவர் மிரண்டே போய் விட்டார் என்றும் இந்த போட்டோவுக்கு கேப்ஷனாக போட்டிருக்கிறார் நடிகர் மாதவன். பிரதமர் மோடி உள்ளிட்ட பலரும் பாராட்டிய நிலையில், நம்பி நாராயணன் சிறை வாசத்துக்கும் அவர் பட்ட கஷ்டங்களுக்கும் ஆறுதலாக ராக்கெட்டரி படத்தின் வெற்றி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பான் இந்தியா படமாக வெளியாக உள்ள இந்த படம் ஆர்.ஆர்.ஆர், கேஜிஎஃப் 2, விக்ரம் போலவே சாதனை படைக்குமா? என்பதை பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











