என் தம்பி நின்றால் நியூஸ், நடந்தால் நியூஸ், எனக்கு அப்படியா?: வாரிசு நடிகை
Recommended Video

மும்பை: தன் தம்பி நின்றால், நடந்தால் அது செய்தி என்று பாலிவுட் நடிகை சாரா அலி கான் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் சயிப் அலி கானின் மகள் சாரா நடித்த முதல் படமான கேதர்நாத் வெற்றி பெற்றது. அதையடுத்து அவர் நடித்த சிம்பா சூப்பர் டூப்பர் ஹிட்டானது.
இரண்டு படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் சாராவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

தைமூர்
சயிப் அலி கான், கரீனா கபூரின் மகனான தைமூர் அலி கான் தான் பாலிவுட்டின் பிரபலமான நபர். அந்த குட்டிப் பையனை புகைப்படம் எடுக்க புகைப்படக் கலைஞர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில் சாரா தனது தம்பி தைமூர் பற்றி பேசியுள்ளார்.

நியூஸ்
என் தம்பி தைமூர் வீட்டை விட்டு வெளியே வந்தால் கூட அது செய்தியாகிவிடுகிறது. ஆனால் எனக்கு அப்படி அல்ல. நான் கடினமாக உழைக்க வேண்டியிருக்கிறது. கடினமாக உழைத்தால் மட்டும் என்னை பற்றி செய்தி வெளியாகிறது என்று சாரா அலி கான் தெரிவித்துள்ளார்.

கேதர்நாத்
சாராவின் முதல் படமான கேதர்நாத் வெளியானபோது அவர் நடிப்பதற்காகவே பிறந்துள்ளதாக விமர்சனம் எழுந்தது. முதல் படத்திலேயே இப்படி ஒரு கவுரவம் கிடைத்ததில் மகிழ்ச்சி என்கிறார் சாரா. மக்கள் என்னை பற்றி நல்லவிதமாக பேசுவதை பார்த்தால் கேதர்நாத் என் முதல் படம் போன்றே தெரியவில்லை என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

ரூ. 1 லட்சம்
ரூ. 1 கோடி கொடுத்தால் உங்களின் பெரிய தம்பி இப்ராஹிமை கன்னத்தில் அறைவீர்களா என்று சாராவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவரோ ரூ. 1 கோடி என்ன ரூ. 1 லட்சம் கொடுத்தாலே அறைவேன் என்று பதில் அளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











