செல்ஃபி எடுக்க பேட்ட நடிகரின் கழுத்தை பிடித்து இழுத்த ரசிகர்: வைரல் வீடியோ

By Siva

Recommended Video

செல்ஃபி எடுக்க நவாஸுத்தீன் சித்திக் கழுத்தை பிடித்து இழுத்த ரசிகர்: வைரல் வீடியோ

கான்பூர்: பாலிவுட் நடிகர் நவாஸுத்தீன் சித்திக்கியுடன் செல்ஃபி எடுக்க ரசிகர் ஒருவர் அவர் கழுத்தை பிடித்து இழுத்த சம்பவம் நடந்துள்ளது.

பாலிவுட் நடிகர் நவாஸுத்தீன் சித்திக்கி புதுமுகம் ஹனி த்ரிஹானின் இயக்கத்தில் ராத் அகேலி ஹை என்ற இந்தி படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துக் கொண்டிருக்கிறார். ஒரு கொலை குறித்து அவர் விசாரணை நடத்துவது போன்று கதை உள்ளது.

When Nawazuddin Siddiqui was pulled by a fan

இந்த படத்தின் ஷூட்டிங்கிற்காக நவாஸ் உத்தர பிரதேச மாநிலம் கான்பூருக்கு வந்தார். ஷூட்டிங்கில் நவாஸ் கலந்து கொண்டது குறித்து அறிந்து ரசிகர்கள் அங்கு வந்துவிட்டனர்.

தனது காட்சிகளில் நடித்து முடித்துவிட்டு அவர் கிளம்பியபோது ரசிகர்கள் அவரை சுற்றி வளைத்தனர். காரில் ஏறச் சென்ற நவாஸ் கூட்டத்தில் சிக்கிக் கொண்டார். அதில் ஒரு ரசிகர் செல்ஃபி எடுக்க நவாஸின் கழுத்தை பிடித்து இழுத்தார். இதை பார்த்த அவரின் பாதுகாவலர்கள் அவரை ரசிகர்களிடம் இருந்து மீட்டு பத்திரமாக காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

நவாஸுத்தீன் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கியபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. நவாஸ் ரஜினிகாந்தின் பேட்ட படம் மூலம் கோலிவுட் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Read more about: selfie செல்ஃபி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X