நோ சொன்ன நயன்தாரா, ஹன்சிகாவை பிடித்த உதயநிதி
சென்னை: ஒரு கல் ஒரு கண்ணாடியில் நயன்தாரா நடிக்க மறுத்ததால் தான் அந்த வாய்ப்பு ஹன்சிகாவுக்கு சென்றுள்ளது.
தயாரிப்பாளராக பிரபலமான உதயநிதி ஸ்டாலின் திடீர் என்று ஒரு நாள் ஹீரோவானது உங்களுக்கு தெரிந்த விஷயம் தான். அவர் நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடியில் அவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்தது நமக்கு தெரியும். ஆனால் அவர் எப்படி படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் என்ற கதை தற்போது தான் தெரிய வந்துள்ளது.
இந்த கதையை வேறு யாருமல்ல உதயநிதி ஸ்டாலினே தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

நயனிடம் தான் முதலில் கேட்டோம்
ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்குமாறு உதயநிதி நயன்தாராவைத் தான் முதலில் கேட்டாராம். ஆனால் படங்களில் இருந்து கொஞ்சம் பிரேக் வேண்டும் என்று கூறி நயன் நடிக்க மறுத்துவிட்டாராம்.

நயன் மறுத்ததால் வந்த ஹன்சிகா
நயன் நடிக்க மறுத்ததையடுத்து ஹன்சிகாவிடம் கேட்டுள்ளனர். அவர் சம்மதித்தவுடன் மளமளவென படத்தை எடுத்து வெளியிட்டுள்ளனர்.

உதயநிதியும், நயனும் பிரண்ட்ஸாம்
உதயநிதி தயாரித்த ஆதவன் படத்தில் நயன்தாரா சூர்யா ஜோடியாக நடித்தார். அப்போது இருந்தே நயனும், உதயநிதியும் நண்பர்களாக உள்ளார்களாம்.

கதிர்வேலன் காதலியாக சம்மதித்த நயன்
கதிர்வேலன் காதலி படம் சுவாரஸ்யமாக இருந்ததால் அதில் தனக்கு ஜோடியாக நடிக்க நயன் சம்மதித்தார் என்றார் உதயநிதி.


Click it and Unblock the Notifications











