கேள்வி கேட்ட சிவகார்த்திகேயன்: மிரட்டிய நயன்தாரா
சென்னை: தன்னை கலாய்த்த சிவகார்த்திகேயனை நயன்தாரா மிரட்டியுள்ளார்.
மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா ஜோடியாக நடித்து வரும் படம் வேலைக்காரன். இந்த படத்தில் ஹீரோவுக்கு மட்டும் அல்ல ஹீரோயினுக்கும் முக்கியத்துவம் அதிகம் என்று மோகன் ராஜா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நயன்தாரா டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

டிவி நிகழ்ச்சி
நயன்தாரா கலந்து கொண்ட நிகழ்ச்சிக்கு சிவகார்த்திகேயன் போன் செய்து பேசினார். நானும் ரவுடி தான் படத்தில் மட்டும் நல்லா நடித்திருந்தீர்களே நயன் என்று கேட்டார்.

மிரட்டல்
சிவகார்த்திகேயன் கேள்வி கேட்டதும் சிரித்தார் நயன்தாரா. சிவா இன்னும் வேலைக்காரன் படத்தின் ஷூட்டிங் முடியல, ஞாபகம் இருக்கட்டும் என்று செல்ல மிரட்டல் விடுத்தார் நயன்.

ஆசை
நயன்தாராவுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று சிவகார்த்திகேயன் ஆசைப்பட்டார். அந்த ஆசை மோகன் ராஜாவின் வேலைக்ககாரன் படம் மூலம் நிறைவேறியுள்ளது.

தனுஷ்
சிவா நடித்த எதிர்நீச்சல் படத்தில் தனுஷ் ஒரு பாடலுக்கு நயன்தாராவுடன் டான்ஸ் ஆடினார். நயனை கூட்டிட்டு வந்து அவரே டான்ஸ் ஆடிவிட்டு அழைத்துச் சென்றுவிட்டார் என்று நயனுடன் சேர்ந்து ஆட முடியாத வருத்தத்தை முன்பு தெரிவித்தார் சிவா என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











