சான்ஸ் கேட்டு போய் பாரதிராஜா ஆபீஸில் அடி வாங்கிய பரோட்டா சூரி

By Siva

சென்னை: சான்ஸ் கேட்டுப் போனபோது பாரதிராஜாவின் அலுவலகத்தில் அடி வாங்கியதாக நடிகர் பரோட்டா சூரி தெரிவித்துள்ளார்.

வென்னிலா கபடிக் குழு படத்தில் சளைக்காமல் பரோட்டா சாப்பிட்ட காட்சி மூலம் பிரபலமானவர் நடிகர் சூரி. பரோட்டா காட்சியில் பிரபலமானாதால் அவர் பரோட்டா சூரி என்று அழைக்கப்படுகிறார்.

இந்நிலையில் சூரி பட வாய்ப்பு தேடி அலைந்தது குறித்து மனம் திறந்துள்ளார்.

பாரதிராஜாவின் அலுவலகம்

பாரதிராஜாவின் அலுவலகம்

ஆரம்ப காலத்தில் நான் நடிக்க வாய்ப்பு கேட்டு எனது நண்பருடன் இயக்குனர் பாரதிராஜாவின் அலுவலகத்திற்கு அடிக்கடி செல்வேன். ஆனால் ஒவ்வொரு முறையும் அவரை பார்க்க முடியவில்லை. அங்குள்ளவர்கள் எங்களை வெளியே அனுப்பினர் என்றார் சூரி.

ஐடியா

ஐடியா

பலமுறை அலைந்தும் பாரதிராஜா சாரை பார்க்கவே முடியவில்லை. அப்போது தான் அந்த அலுவலகத்திற்கு அருகில் இஸ்திரி போடும் ஒருவர் என்னிடம் பாரதிராஜா கிராமத்து கதை எடுப்பவர் அதனால் வேஷ்டி அணிந்து வந்து வாய்ப்பு கேளுங்கள் என்று கூறினார் என்று சூரி தெரிவித்தார்.

வேஷ்டியில்

வேஷ்டியில்

இஸ்திரிகாரரின் அறிவுரையை ஏற்று மறுநாள் பாரதிராஜா சாரின் அலுவலகத்திற்கு வேஷ்டியில் சென்றேன். ஆனால் அங்கு பலரும் வேஷ்டியில் வந்திருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். அலுவலகத்தில் இருந்தவர்கள் என்னை வரவேற்று சிறிது நேரம் காத்திருக்குமாறு கூறினார்கள் என்றார் சூரி.

டயர் திருடன்

டயர் திருடன்

வேஷ்டி அணிந்த யாரோ உள்ளூர் வியாபாரி பாரதிராஜாவின் கார் டயரை முந்தைய நாள் திருவிட்டாராம். அதனால் தான் வேஷ்டி அணிந்தவர்கள் விசாரணைக்கு வந்ததை நான் உணர்ந்தேன் என்று சூரி கூறினார்.

அடி வாங்கினேன்

அடி வாங்கினேன்

அப்போது திடீர் என்று சிலர் வந்து எங்களை தாக்கினர். நான் ஓடிப் போய் ஒளிந்துகொள்ள முயன்றேன். பின்னர் உண்மை அறிந்து அவரது அலுவலகத்தில் இருந்தவர்கரள் வந்து எங்களிடம் மன்னிப்பு கேட்டனர். அதன் பிறகு அந்த அலுவலகத்திற்கு நான் செல்லவே இல்லை என்று தெரிவித்தார் சூரி.

பாரதிராஜா சாருடன்

பாரதிராஜா சாருடன்

பாண்டிநாடு படத்தில் தற்போது பாரதிராஜா சாருடன் சேர்ந்து நடிக்கிறோம் என்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஒரு காட்சியில் நானும், விஷாலும் பாரதிராஜாவை ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் செல்வோம். அந்த காட்சியில் நடிக்கையில் அவரது காலைத் தொட்டு ஆசிர்வாதம் வாங்கினேன் என்றார் சூரி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X