twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாப்கார்னால் சரிந்த பி.வி.ஆர்., ஐநாக்ஸ் பங்குகள்

    By Siva
    |

    Recommended Video

    பாப்கார்னால் சரிந்த பி.வி.ஆர்., ஐநாக்ஸ் பங்குகள்- வீடியோ

    மும்பை: பாப்கார்னால் பிவிஆர் மற்றும் ஐநாக்ஸ் மல்டிபிளக்ஸுகளின் பங்குகள் சரிந்துள்ளது.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மல்டிபிளக்ஸுகளில் பாப்கார்ன், தண்ணீர், உணவுப் பொருட்கள் அநியாய விலைக்கு விற்கப்படுவதாகக் கூறி மும்பை உயர் நீதிமன்ற்ததில் வழக்கு தொடரப்பட்டது.

    இது குறித்து 4 வாரங்களில் பதில் அளிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

    உணவு பொருட்கள்

    உணவு பொருட்கள்

    மக்கள் வெளி உணவுகளை மல்டிபிளக்ஸுகளுக்குள் எடுத்துச் செல்லலாம் என்று மகாராஷ்டிரா மாநில உணவுத் துறை அமைச்சர் ரவீந்திர சவான் சட்டசபையில் தெரிவித்தார்.

    ஐநாக்ஸ்

    ஐநாக்ஸ்

    ரவீந்திர சவான் அறிவிப்பை அடுத்து பிவிஆர், ஐநாக்ஸ் ஆகிய மல்டிபிளக்ஸுகளின் பங்குகள் 13 மற்றும் 5.4 சதவீதம் குறைந்தது. மகாராஷ்டிராவில் பிவிஆருக்கு 157 ஸ்கிரீன்களும், ஐநாக்ஸுக்கு 118 ஸ்கிரீன்களும் உள்ளன.

    குளிர்பானங்கள்

    குளிர்பானங்கள்

    அமைச்சரின் உத்தரவு அமலுக்கு வந்தால் பாப்கார்ன், குளிர்பானங்கள் மூலம் கொள்ளை லாபம் சம்பாதிக்கும் மல்டிபிளக்ஸுகளின் வருமானம் பெரும் அளவில் பாதிக்கப்படும். நெட் பாக்ஸ் ஆபீஸ் வருமானத்தை அடுத்து உணவு, குளிர்பானங்கள் மூலம் தான் மல்டிபிளக்ஸுகளுக்கு அதிக வருமானம் வருகிறது.

    டிக்கெட்

    டிக்கெட்

    வெளி உணவுகளை அனுமதித்து, மேலும் பாப்கார்ன், குளிர்பானங்களை குறைந்த விலைக்கு விற்குமாறு சட்டம் கொண்டு வந்தால் மல்டிபிளக்ஸுகள் டிக்கெட் விலையை ஏற்றும் வாய்ப்பு அதிகம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். வெளி உணவுப் பொருட்களை மல்டிபிளக்ஸுகளுக்குள் எடுத்துச் செல்ல அனுமதிப்பது குறித்து மகாராஷ்டிரா மாநில அரசு இன்னும் சுற்றறிக்கை விடவில்லை. இந்நிலையில் இது குறித்த வழக்கு விசாரணை வரும் 25ம் தேதி நடக்கிறது.

    Read more about: pvr பிவிஆர்
    English summary
    PVR and Inox shares fell on friday after Maharashtra government's announcement about allowing outside in the multiplexes.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X