அட கொடுமையே.. பிரியங்கா சோப்ரா உலக அழகியான போது... அவருடைய கணவருக்கு 7 வயது தானாம்!
சென்னை : பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா உலக அழகி பட்டம் வாங்கிய போது அவரது கணவர் நிக் ஜோனஸ் வெறும் 7 வயது சிறுவன் என்பது தெரியவந்துள்ளது.
பிரியங்கா சோப்ரா 2002ம் ஆண்டு விஜய்க்கு ஜோடியாக தமிழன் படத்தில் நடித்து தனது திரைப்பயணத்தை தொடங்கினார்.'
பாலிவுட் மட்டுமின்றி ஹாலிவுட்டிலும் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து முன்னணி நடிகையாக வலம் வந்த பிரியங்கா சோப்ரா.

பிரியங்கா சோப்ரா : கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் படங்களில் மாஸ் காட்டிய பிரியங்கா சோப்ரா, குவாண்டிகோ என்ற அமெரிக்க டி.வி சீரியல் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான நடிகையாக மாறினார். பாடகர் நிக் ஜோன்சை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆண்டு வாடகைத்தாய் முறை மூலம் பெண் குழந்தைக்கு தாயானார். குழந்தை பிறந்த பிறகும் படங்களில் செம பிஸியாக நடித்து வருகிறார்.
சீட்டடெல் : நடிகை பிரியங்கா சோப்ரா தற்போது, ஸ்டான்லி டூசி, லெஸ்லி மான்வில்லே ஆகியோருடன் இணைந்து சீட்டடெல் வெப் தொடரில் நடித்துள்ளார். 6 எபிசோடுகள் கொண்ட இந்த வெப் தொடரின் முதல் சீசன், ஏப்ரல் 28 ஆம் தேதி முதல் அமேசான் பிரைமில் வாரம் தோறும் வெளியாகி வருகிறது. இந்த வெப் தொடர், ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாக உள்ளது.

லவ் அகெய்ன் : மேலும், பிரியங்கா சோப்ரா லவ் அகெய்ன் என்ற படத்தில் நடித்துள்ளார். அந்த படம் கடந்த வாரம் வெளியான நிலையில், ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த பிரியங்கா சோப்ரா, தனது டேட்டிங் அனுபவம் குறித்து பேசி உள்ளார். அதில், ஷாஹித் கபூர், ஹனுமான் பவேஜா, ஷாருக்கான் ஆகியோர்களுடன் தான் டேட்டிங்கில் இருந்து இருக்கிறேன். தான் டேட்டிங்கில் இருந்த அனைவருமே மிகவும் நல்லவர்கள் என்று கூறியிருந்தார்.

7 வயது பையன் : மேலும் தனது கணவர் குறித்து சுவாரசியமான தகவல் ஒன்றையும் கூறியுள்ளார். அதில் நான் உலக அழகி பட்டத்தை வென்ற போது தனக்கு வயது 17 என்றும், அந்த நிகழ்ச்சியில் தனது கணவர் நிக் ஜோனாஸ் அவரது தந்தையுடன் கலந்து கொண்டதாகவும், அப்போது அவருக்கு வயது 7 என்று கூறியுள்ளார். நடிகை பிரியங்கா சோப்ராவை விட, நிக் ஜோனாஸ் 10 வயது சிறியவர் என்பது தெரியவந்துள்ளது, இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் அட கொடுமையே என கமெண்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











