என் பொண்டாட்டிய கட்டிக்க ஆசைப்பட்டவன் தான நீ: நடிகரை கலாய்த்த சீனியர்

By Siva

பெங்களூர்: கன்னட நடிகர் அம்பரீஷின் மனைவியும், நடிகையுமான சுமலதாவை முதன்முதலாக பார்த்தபோது வாரிசு நடிகர் ஒருவர் அவரை திருமணம் செய்து கொள்ள விரும்பியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி படங்களில் ஒரு காலத்தில் ஹீரோயினாக நடித்தவர் சுமலதா. 15 வயதில் நடிக்க வந்த அவர் கன்னட நடிகரான அம்பரீஷை திருமணம் செய்து கொண்டு பெங்களூரில் செட்டில் ஆனார்.

கணவர் இறந்த பிறகு அவர் போட்டியிட்ட மாண்டியா லோக்சபா தொகுதியில் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்றுள்ளார் சுமலதா.

சுமலதா

சுமலதா

பிரபல நடிகரும், இயக்குநருமான ரமேஷ் அரவிந்த் வீக்என்ட் வித் ரமேஷ் என்கிற டிவி நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். அந்த நிகழ்ச்சியில் நடிகை சுமலதா கலந்து கொண்டு பல சுவாரஸ்யமான விஷயங்களை தெரிவித்தார். மேலும் மறைந்த தனது கணவர் அம்பரீஷை நினைத்து கண் கலங்கி பார்ப்பவர்களையும் ஃபீல் பண்ண வைத்தார்.

புனித் ராஜ்குமார்

புனித் ராஜ்குமார்

ரமேஷ் நிகழ்ச்சியில் சுமலதா ஒரு சுவாரஸ்யமான விஷயத்தை தெரிவிக்க அதை கேட்ட அனைவரும் சிரிக்கத் துவங்கிவிட்டனர். என்னை படப்பிடிப்பு தளத்தில் பார்த்த புனித் ராஜ்குமாருக்கு என் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. அவர் வீட்டிற்கு சென்ற பிறகு, நான் நடிகை சுமலதாவை திருமணம் செய்ய விரும்புகிறேன் என்று தன் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார் என்றார் சுமலதா.

திருமணம்

திருமணம்

சுமலதாவை தான் திருமணம் செய்வேன் என்று புனித் தெரிவித்தபோது அவருக்கு வயது 5. புனித் பேசியது குறித்து அறிந்த அம்பரீஷ் அவர் வளர்ந்த பிறகும் அவரை கிண்டல் செய்துள்ளார். என் மனைவியை திருமணம் செய்ய நினைத்தவர் தானே நீங்க என்று அம்பரீஷ் புனித் ராஜ்குமாரை அடிக்கடி கலாய்த்துள்ளார்.

கண்ணீர்

கண்ணீர்

வீக்என்ட் வித் ரமேஷ் நிகழ்ச்சியில் பேசிய புனித் ராஜ்குமார் தான் குட்டிப் பையனாக இருந்த போது நடந்த சம்பவத்தை நினைத்து சிரித்தார். அம்பரீஷ் பற்றி பேச்சு எழுந்த உடன் சுமலதா கவலையாகிவிட்டார். பின்னர் தன்னைத் தானே தேற்றிக் கொண்டு நிகழ்ச்சியில் பேசினார் அவர்.

அபிஷேக் கவுடா

அபிஷேக் கவுடா

அம்பரீஷ், சுமலதா ஆகியோரின் மகன் அபிஷேக் நடித்த முதல் படமான அமர் அண்மையில் வெளியானது. அபிஷேக்கின் முதல் பட வேலைகள் துவங்கியபோது இருந்த அம்பரிஷ் ரிலீஸின் போது இல்லையே என்று அவரது ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் வருத்தப்பட்டனர். அபிஷேக் தான் அம்மா சுமலதாவுக்கு இருக்கும் ஒரே ஆறுதல்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X