என்னை கட்டி வைத்து அடி கண்ணா: ரஜினி கூறியதை கேட்டு அதிர்ந்த நடிகர்
சென்னை: பாட்ஷா படத்தில் ரஜினியை கட்டி வைத்து அடிக்கும் காட்சியில் நடிக்க தயங்கியதாக ஆனந்த்ராஜ் தெரிவித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 1995ம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் படமான பாட்ஷா 22 ஆண்டுகள் கழித்து அண்மையில் டிஜிட்டலில் வெளியானது. இத்தனை ஆண்டுகள் கழித்து வெளியான போதிலும் அந்த படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில் பாட்ஷா படத்தில் நடித்த அனுபவம் பற்றி ஆனந்த்ராஜ் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

ரஜினி
பல ஆண்டுகளுக்கு முன்பு ரஜினியின் உதவியாளர் எனக்கு போன் செய்து சூப்பர் ஸ்டாரை நேரில் சந்திக்குமாறு கூறினார். நேரில் சென்றபோது தான் நடித்துவரும் பாட்ஷா படத்தில் ஒரு கதாபாத்திரம் இருப்பதாகவும் அதில் நடிக்குமாறும் கூறினார்.

அடி
பாட்ஷா படத்தில் ரகுவரன், சரண்ராஜ் இருக்கும்போது நமக்கு என்ன கதாபாத்திரம் என்று ரஜினியை சந்தேகமாக பார்த்தேன். அவரோ என்னை கட்டி வைத்து அடிக்கும் கதாபாத்திரம் என்றார்.

தயக்கம்
உங்களை கட்டி வைத்து அடிக்க வேண்டுமா என்று கூறி அந்த படத்தில் நடிக்க தயங்கினேன். ஆனால் ரஜினி என் தயக்கத்தை புரிந்து கொண்டு சும்மா நடிங்க என்று ஊக்கமளித்து நடிக்க வைத்தார்.

மகிழ்ச்சி
ரஜினி அளித்த ஊக்கத்தால் அவரை அடிக்கும் காட்சியில் நம்பிக்கையுடன் நடித்தேன். அந்த படம் இத்தனை ஆண்டுகள் கழித்து டிஜிட்டலில் ரிலீஸாகியுள்ள நிலையில் அமோக வரவேற்பு கிடைத்திருப்பதை பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன் என்றார் ஆனந்த்ராஜ்.


Click it and Unblock the Notifications











