நிறைவேறாமல் போன தனுஷின் ஆசை: காரணம் ரஜினி
சென்னை: தனுஷ் ரொம்ப ஆசைப்பட்ட விஷயம் நடக்காமல் போய்விட்டது.
பா. ரஞ்சித் ரஜினிகாந்தை வைத்து இயக்கியுள்ள காலா படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரித்துள்ளார். ரஜினியே கேட்டதால் அவர் காலா படத்தை தயாரித்திருக்கிறார்.
இதை ரஜினியே காலா இசை வெளியீட்டு விழாவில் தெரிவித்தார்.

ரஜினி
தலைவர் படத்தை தயாரித்தால் மட்டும் போதாது அவருடன் சேர்ந்து ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பது தனுஷ் ஆசை. காலா படத்தில் ரஜினியுடன் நடித்துவிட வேண்டும் என்று தனுஷ் நினைத்தார்.

தனுஷ்
மாமனாருடன் சேர்ந்து நடிக்க ஆசையாக உள்ளது, அது எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் சரி என்று தனுஷ் ரஞ்சித்திடம் தெரிவித்துள்ளார். ரஞ்சித்தும் இது குறித்து ரஜினியிடம் பேசியுள்ளார்.

வேண்டாம்
தனுஷின் ஆசை குறித்து அறிந்த ரஜினியோ அவர் என்னுடன் சேர்ந்து நடிக்க வேண்டாம், தயாரிப்போடு நிறுத்துக் கொள்ளட்டும் என்று கூறிவிட்டாராம்.

காரணம்
காலா படத்தில் ரஜினியுடன் நடிக்க முடியவில்லையே என்று தனுஷுக்கு வருத்தமாம். இருப்பினும் அதை காட்டிக் கொள்ளாமல் உள்ளார். ஆனால் தனுஷை தன் படத்தில் நடிக்க வைக்க ரஜினி ஏன் மறுத்தார் எனத் தெரியவில்லை.


Click it and Unblock the Notifications











