தும் ஹீரோ.. ரஜினியை அப்பவே தலை சுற்ற செய்த ரசிகர்.. சூப்பர்ஸ்டாரே சொன்ன சூப்பர் குட்டி ஸ்டோரி!

சென்னை: எந்திரன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின் போது நடிகர் ரஜினிகாந்த் சொன்ன காமெடி குட்டி ஸ்டோரி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடிப்பில் கடந்த 2010ம் ஆண்டு வெளியான படம் எந்திரன்.

ஹாலிவுட் படங்களுக்கு இணையான தொழில்நுட்பத்துடன் பிரம்மாண்டமாக இயக்குநர் ஷங்கர் அந்த படத்தை இயக்கி இருந்தார்.

எந்திரன் பிரஸ் மீட்

எந்திரன் பிரஸ் மீட்

எந்திரன் படத்தை பாலிவுட்டில் புரமோஷன் செய்ய மும்பை சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த் அங்கே நடைபெற்ற பிரஸ் மீட் ஒன்றில் கலந்து கொண்டார். அவருடன் அமிதாப் பச்சன், நடிகை ஐஸ்வர்யா ராய், ஏ.ஆர். ரஹ்மான், ஷங்கர் உள்ளிட்ட பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

குட்டிக் கதை

குட்டிக் கதை

எந்தவொரு சினிமா விழாவாக இருந்தாலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பரான ஒரு குட்டி ஸ்டோரியை சொல்வது வழக்கம். அப்படி அவர் சொன்ன குட்டிக் கதையை கேட்டு அங்கிருந்த ஐஸ்வர்யா ராய், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பிரபலங்களுடன் ரசிகர்களும் விழுந்து விழுந்து சிரித்தனர்.

Recommended Video

தடுப்பூசி கண்டிப்பா போடுங்க | Actress Keerthy Suresh Awareness Video | Vaccine
ரிட்டயர்

ரிட்டயர்

தனது சகோதரரை சந்திக்க பெங்களூரு சென்ற போது ரசிகர் ஒருவர் என்னை பார்த்து நீங்க எப்போ ரிட்டயர் ஆகப் போறீங்க என கேட்டார். என்னடா ஆரம்பமே இப்படி இருக்கேன்னு உள்ளுக்குள்ள நினைச்சிக்கிட்டு.. இல்லைப்பா.. இப்போ ரோபோன்னு ஒரு படம் பண்ணிட்டு இருக்கேன் ஐஸ்வர்யா ராய் கூட என்றேன்.

ஐஸ்வர்யா ராய் ஹீரோயினா

ஐஸ்வர்யா ராய் ஹீரோயினா

ஐஸ்வர்யா ராய் ஹீரோயின்னு சொன்னதை மட்டும் காதில் வாங்கிய அவர், ஓ.. ஐஸ்வர்யா ராய் ஹீரோயினா.. சூப்பரான நடிகையாச்சே அவங்க.. ரொம்ப அழகா இருப்பாங்களே என வர்ணித்து விட்டு, கடைசியாக ஆமா? ஹீரோ யாரு என இந்தியில் கேட்டுள்ளார்.

நீங்களா ஹீரோ

நான் தான்பா ஹீரோ என கெத்தா சொல்ல.. அவர் உடனே 'tum hero' நீங்களா ஹீரோ என இந்தியில் கேட்ட உடனே எனக்கு ஒரே தர்ம சங்கடமா போச்சு.. உடனடியா அவரோட குழந்தைங்க.. அப்பா இவர் தான்பா ரோபோ படத்தோட ஹீரோ என அவர் காதை கடிக்க அவர் அப்படியே நலம் விசாரித்து விட்டபடியே சென்றார். ஆனால், அவர் கேட்ட அந்த வார்த்தையும் ரியாக்‌ஷனும் இருக்கே என ரஜினிகாந்த் கூற ஒட்டுமொத்த அரங்கமே விழுந்து விழுந்து சிரித்தது. நீங்களும் அந்த வீடியோவை பார்த்து என்ஜாய் பண்ணுங்க!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X