ரம்யா கிருஷ்ணனை ஒரேயொரு காட்சியை 37 முறை நடிக்க வைத்த இயக்குநர்

By Siva

Recommended Video

Super Deluxe Movie: ரம்யா கிருஷ்ணனை ஒரேயொரு காட்சியை 37 முறை நடிக்க வைத்த இயக்குநர்- வீடியோ

சென்னை: சூப்பர் டீலக்ஸ் படத்தில் ரம்யா கிருஷ்ணனை ஒரு காட்சியை மட்டும் 37 முறை நடிக்க வைத்துள்ளார் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா.

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் சூப்பர் டீலக்ஸ். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன் ஆபாசப்பட நடிகையாக நடித்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும்.

படத்தின் ஒரு காட்சிக்காக ரம்யா கிருஷ்ணன் பட்ட பாடு தற்போது தெரிய வந்துள்ளது.

கதாபாத்திரம்

கதாபாத்திரம்

சூப்பர் டீலக்ஸ் படத்தில் வரும் தனது கதாபாத்திரம் தான் தன் கெரியரில் மிகவும் சவாலாக இருந்தது என்கிறார் ரம்யா கிருஷ்ணன். இந்த படம் நடிகர்களை தாண்டி கதை பற்றியது, இயக்குநர் குமாரராஜா பற்றியது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

37 டேக்

37 டேக்

ரம்யா கிருஷ்ணனை ஒரு காட்சியை இரண்டு நாட்களாக 37 முறை நடிக்க வைத்துள்ளார் குமாரராஜா. அவர் அப்படி தன்னை திரும்பத் திரும்ப நடிக்க வைத்ததை பார்த்து தன்னை விட தனது உதவியாளர்கள் அதிர்ச்சி அடைந்ததாக கூறுகிறார் ரம்யா.

100 முறை

100 முறை

பல காட்சிகள் 100 முதல் 150 டேக்குள் வரை சென்றதாக கூறுகிறார் குமாரராஜா. ஆபாச பட நடிகையாக நடிக்க முதலில் நதியாவை கேட்டோம் பின்னர் ரம்யா நடித்தார். அவர் ரொம்பவே கூல் என்று தெரிவித்துள்ளார் இயக்குநர்.

ரம்யா

ரம்யா

சூப்பர் டீலக்ஸ் ட்ரெய்லரை பார்த்தவர்கள் ரம்யா கிருஷ்ணன் கதாபாத்திரம் செமயாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். சும்மாவே ரம்யா நடிக்கிறார் என்றால் எதிர்பார்ப்பு இருக்கும். இந்நிலையில் அவர் துணிந்து ஆபாச பட நடிகையாக நடித்திருக்கிறார். அதனால் நிச்சயம் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் என்று நம்பப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X