»   »  ஹீரோவை பார்த்து பயந்த மணிரத்னம் நாயகி

ஹீரோவை பார்த்து பயந்த மணிரத்னம் நாயகி

Posted By:
Subscribe to Oneindia Tamil
அதிதி ராவ் ஹைதரி பத்மாவத் படத்தின் வெற்றியை கண்டு நெகிழ்ச்சி- வீடியோ

மும்பை: பயந்தேன், அழுதேன் என்று பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் நடிகை அதிதி ராவ் ஹைதரி.

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய பத்மாவத் படத்தில் மன்னன் அலாவுத்தீன் கில்ஜியின் மனைவி மெஹருன்னிசாவாக நடித்தவர் அதிதி ராவ் ஹைதரி.

இந்நிலையில் படம் குறித்து அவர் பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது,

கில்ஜி

கில்ஜி

பத்மாவத் படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பை பார்த்து மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த படத்திற்காக பலர் எவ்வளவு கடினமாக உழைத்தார்கள் என்பது எனக்கு தெரியும்.

செட்

செட்

பத்மாவத் பட செட்டில் இருந்த அனைவரும் ரத்தமும், வியர்வையும் சிந்தி உழைத்தனர். அனைவரின் பிரார்த்தனை தான் படத்தை வெற்றி பெற செய்துள்ளது.

போஸ்டர்

போஸ்டர்

என் கதாபாத்திரம் சர்பிரைஸாக இருக்கட்டும் என்று நினைத்து தான் இயக்குனர் பன்சாலி என் புகைப்படத்தை பத்மாவத் போஸ்டரில் போடவில்லை. என்னை படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள சொல்லவில்லை.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

படத்திற்கு கிடைத்த வரவேற்பு மற்றும் என் கதாபாத்திரத்தை பார்த்து ரசிகர்கள் பாராட்டியதை பார்த்து நான் அழுதுவிட்டேன். என் கதாபாத்திரம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது.

பயம்

பயம்

ரன்வீர் சிங் செட்டில் இருக்கும் போது கில்ஜியாகவே மாறிவிடுவார். சில சமயம் அவர் என்னை பார்த்தபோது எனக்கு பயமாக இருந்தது. என் கதாபாத்திரம் மிகவும் தைரியமானது என்றார் அதிதி ராவ் ஹைதரி.

English summary
Bollywood actress Aditi Rao Hydari talked about Padmavaat's success and how there were times when she used to be scared of 'Khilji' Ranveer Singh.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil