பெண் டான்ஸ் மாஸ்டரை அழவிட்டு ஓட வைத்த ஹீரோ

By Siva

Recommended Video

பாலிவுட் நடிகர் சல்மான் கானால் டான்ஸ் மாஸ்டர் ஃபரா கான் அழுது, செட்டில் இருந்து ஓடியுள்ளார்.

மும்பை: பாலிவுட் நடிகர் சல்மான் கானால் டான்ஸ் மாஸ்டர் ஃபரா கான் அழுது, செட்டில் இருந்து ஓடியுள்ளார்.

பாலிவுட்டின் பிரபலமான டான்ஸ் மாஸ்டரான ஃபரா கான் சூப்பர் டான்ஸர் 3 நடன நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். அந்த நிகழ்ச்சியில் அவர் சல்மான் கான் பற்றிய சுவாரஸ்ய தகவலை வெளியிட்டுள்ளார்.

மேலும் எந்த நடிகருக்கு டான்ஸே வராது என்றும் தெரிவித்துள்ளார்.

ஜாக்கி ஷ்ராஃப்

ஜாக்கி ஷ்ராஃப்

ஜாக்கி ஷ்ராஃபுக்கு டான்ஸ் கற்றுக் கொடுக்கத் தான் ரொம்ப கஷ்டப்பட்டேன். என் கெரியரின் துவக்கத்தில் ஒரு படத்தில் நான் ஜாக்கிக்கு டான்ஸ் கற்றுத் தர வேண்டும். நம் கெரியர் துவங்கும் முன்பே முடிந்துவிடும் என்று நினைத்தேன். அந்த அளவுக்கு ஜாக்கிக்கு டான்ஸ் வராது என்று ஃபரா கான் தெரிவித்துள்ளார்.

ஃபரா கான்

ஃபரா கான்

சல்மான் கான் ஸ்கீரன் டெஸ்ட்டுக்கு வந்திருந்தார். அப்பொழுது அவருக்கு நான் டான்ஸ் கற்றுக் கொடுக்க வேண்டும். 4 மணிநேரம் முயன்றும் முடியாததால் உனக்கு யாராலும் டான்ஸ் கற்றுக் கொடுக்க முடியாது என்று கூறி அழுது கொண்டே ஓடிவிட்டேன் என்கிறார் ஃபரா.

அதிர்ச்சி

அதிர்ச்சி

மேனே பியார் கியா படத்தின் ஹீரோவாக சல்மான் கான் தேர்வு செய்யப்பட்டது குறித்து பின்பு அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். படத்தை பார்த்தபோது அவர் நன்றாக நடித்ததை பார்த்து மேலும் அதிர்ச்சி அடைந்தேன் என்று ஃபரா கான் கூறியுள்ளார்.

பாலிவுட்

பாலிவுட்

சல்மான் கானும், ஃபரா கானும் தற்போது நண்பர்களாகிவிட்டனர். சல்மானின் பல படங்களுக்கு டான்ஸ் மாஸ்டராக இருந்துள்ளார் ஃபரா கான். ஃபரா தற்போது படங்களையும் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X