வீட்டில் யாரை காதலிக்காதே என்றார்களோ அந்த நடிகரை காதலிக்கும் வாரிசு நடிகை
மும்பை: சாரா அலி கானும், சுஷாந்த் சிங் ராஜ்புட்டும் தங்களின் புகைப்படங்களை நீக்கிவிடுமாறு புகைப்படக் கலைஞர்களிடம் கெஞ்சியுள்ளனர். கரீனா யாரை காதலிக்க வேண்டாம் என்றாரோ அவரையே காதலிக்கிறார் சாரா.
பாலிவுட் நடிகர் சயிப் அலி கான், முன்னாள் மனைவி அம்ரிதா சிங்கின் மகளான சாரா அலி கான் கேதர்நாத் படம் மூலம் நடிகையானார். அந்த படம் ஹிட்டானது. அதன் பிறகு சாரா ரன்வீர் சிங்குடன் சேர்ந்து நடித்த சிம்பா சூப்பர் டூப்பர் ஹிட்டானது.
தற்போது படங்களில் பிசியாக இருக்கும் சாரா காதலில் விழுந்துள்ளாராம்.

சுஷாந்த் சிங் ராஜ்புட்
சாரா தனது முதல் படத்தின் ஹீரோவான சுஷாந்த் சிங் ராஜ்புட்டை காதலிப்பதாக பாலிவுட்டில் பேச்சாக உள்ளது. யாருக்கும் தெரியாமல் சாரா சுஷாந்த் வீட்டிற்கு செல்வதும், அவர் சாரா வீட்டிற்கு வருவதும் அடிக்கடி நடக்கிறதாம்.

சாரா
அப்படி காதலர்கள் ரகசியமாக சந்தித்தபோது அங்கிருந்த புகைப்படக் கலைஞர்கள் கேமராக்களை எடுத்து ஏகப்பட்ட புகைப்படங்கள் எடுத்துவிட்டார்களாம். இதை பார்த்த காதல் ஜோடி தயவு செய்து அந்த படங்களை நீக்கிவிடுங்கள் என்று கெஞ்சிக் கூத்தாடி நீக்க வைத்தார்களாம்.

காதல்
முன்னதாக சுஷாந்த் சிங் நடிகை க்ரிட்டி சனோனை காதலித்து வந்தார். அதற்கும் முன்பு மணிகர்னிகா புகழ் அங்கிதா லோகந்தேவை பல காலம் காதலித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கரீனா கபூர்
சயிப் அலி கானின் இரண்டாவது மனைவியான கரீனா கபூர் சாராவுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். அதாவது முதல் பட ஹீரோவை காதலிக்க வேண்டாம் என்று அறிவுரை வழங்கியுள்ளார். இந்நிலையில் சாரா தனது முதல் பட ஹீரோவை காதலித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











