இங்க பார்யா.. ரோட்டில் நடிகை டான்ஸ்.. பிச்சைக்காரி என நினைத்து பணம் போட்டவெளிநாட்டினர்!

By

மும்பை: பிரபல நடிகை ரோட்டில் நடனம் ஆடியதால் அவரை பிச்சைக்காரி என நினைத்து வெளிநாட்டினர் பணம் கொடுத்துள்ளனர்.

பிரபல இந்தி நடிகர் சைஃப் அலிகான். ஏராளமான இந்தி படங்களில் ஹீரோ, வில்லன் கேரக்டரில் நடித்துள்ளார்.

சைஃப் அலிகானின் முதல் மனைவி அமிர்தா சிங். இவர்களுக்கு பிறந்தவர், சாரா அலிகான்.

லவ் ஆஜ்கல்

லவ் ஆஜ்கல்

இந்திப் படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார், சாரா. 2018 ஆம் ஆண்டு வெளியான கேதார்நாத் படத்தில் சுஷாந்த் சிங் ஜோடியாக அறிமுகமானார். தொடர்ந்து ரன்வீர் சிங் ஜோடியாக, சிம்பா, கார்த்திக் ஆர்யனுடன் லவ் ஆஜ்கல் படங்களில் நடித்துள்ளார்.

டபுள் ஆக்ட் சாரா

டபுள் ஆக்ட் சாரா

இப்போது, தனுஷ், அக்‌ஷய் குமாருடன் இணைந்து அட்ரங்கி ரே என்ற படத்தில் நடித்து வருகிறார். இதை ஆனந்த் எல் ராய் இயக்குகிறார். இதில் சாரா இரண்டு வேடங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

த்ரோபேக் பேட்டி

த்ரோபேக் பேட்டி

கொரோனாவால் தடைபட்டிருந்த இதன் ஷூட்டிங் இப்போது மீண்டும் தொடங்க இருக்கிறது. இந்நிலையில், அவருடைய பழைய த்ரோபேக் வீடியோ பேட்டி ஒன்று இப்போது வைரலாகி வருகிறது. அதில், தான் சாலையில் நடனம் ஆடும்போது, பிச்சைக்காரி என நினைத்து சிலர் பணம் போட்டதாகக் கூறியுள்ளார்.

கடைக்கு வெளியே

கடைக்கு வெளியே

இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: விடுமுறைக்காக, நாங்கள் வெளிநாடு சென்றிருந்தோம். அப்பா சைஃப் அலி கானும், அம்மாவும் கடைக்குச் சென்றிருந்தனர். நான் சிறுமியாக இருந்தேன். என் சகோதரன் இப்ராஹிம் அலி கானுடன் ஒரு கடைக்கு வெளியே நின்றிருந்தோம்.

நின்று விட்டார்கள்

நின்று விட்டார்கள்

அப்போது, நான் நடனம் ஆடத் தொடங்கினேன். உடனே அங்கு நடந்து சென்று கொண்டிருந்தவர்கள், நின்று விட்டார்கள். என் நடனத்தை பார்த்துவிட்டு பணம் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். நான் பிச்சை எடுப்பதாக அவர்கள் நினைத்து விட்டார்கள். இதைப் பிறகு என் அம்மாவிடம் சொன்னேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X