குறட்டை விட்ட ஷாருக்கான்: கட்டிலில் இருந்து கீழே தள்ளிவிட்ட சல்மான் கான்
மும்பை: கரண் அர்ஜுன் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது ஒரு நாள் ஷாருக்கானை கட்டிலில் இருந்து கீழே தள்ளிவிட்டதாக நடிகர் சல்மான் கான் பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் 7 ரியாலிட்டி ஷோவை நடிகர் சல்மான் கான் நடத்தி வருகிறார். அந்த நிகழ்ச்சியில் தனது முன்னாள் காதலிகளான கத்ரீனா கைஃப் மற்றும் ஐஸ்வர்யா ராய் பற்றி பேசினார்.
தற்போது தன்னுடன் கரண் அர்ஜுன் படத்தில் நடித்த ஷாருக்கான் பற்றி பேசியுள்ளார்.(ஷாருக்கானுக்கும், சல்மான் கானுக்கும் எப்பொழுதும் ஏழாம் பொருத்தம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.)

குறட்டை
பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் குறட்டை பற்றி பேச்சு வந்தபோது சல்மான் கான் ஷாருக்கான் பற்றி பேசினார்.

கரண் அர்ஜுன்
கரண் அர்ஜுன் படத்தில் நடித்தபோது ஷாருக்கான் தனது அறையை விருந்தாளிகளுக்கு கொடுத்துவிட்டு எங்கள் அறைக்கு வந்தார். எங்கள் அறையில் நான், சொஹைல் கான், பன்ட்டி வாலியா மற்றும் சுஷில் ஆகியோர் ஏற்கனவே இருந்தோம் என்றார் சல்மான் கான்.

குறட்டை விட்ட ஷாருக்
எங்கள் அறைக்கு வந்த ஷாருக் படுத்து தூங்கியதும் குறட்டை விட ஆரம்பித்துவிட்டார். முதலில் அது எங்களுக்கு சிரிப்பாக இருந்தது. ஆனால் நேரம் செல்ல செல்ல எங்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்று சல்மான் தெரிவித்தார்.

ஷாருக்கை தள்ளிவிட்டோம்
ஷாருக்கின் குறட்டை சத்தத்தால் அதிகாலை 3 மணி வரையும் எங்களால் தூங்க முடியவில்லை. அதன் பிறகு அவரது குறட்டையை நிறுத்த அவரை கட்டிலில் இருந்து கீழே தள்ளிவிட்டோம் என்று சல்மான் கூறினார்.

நாங்கள் தூங்கிவிட்டோம்
கட்டிலில் இருந்து கீழே விழுந்த ஷாருக் விழித்துக் கொண்டார். அதன் பிறகு நாங்கள் நிம்மதியாக தூங்கிவிட்டோம் என்றார் சல்மான்.


Click it and Unblock the Notifications











