சூர்யாவுடன் மோதும் டாப்ஸி.. சிம்புவின் வெந்து தணிந்தது காடு எப்போது ரிலீஸ்? இன்றைய டாப் 5 பீட்ஸில்!

சென்னை: சூர்யாவுடன் மோதும் டாப்ஸி... சிம்புவின் வெந்து தணிந்தது காடு எப்போது ரிலீஸ் என்பது உள்ளிட்ட பல்வேறு சுவாரசிய தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம்பெற்றுள்ளது.

Recommended Video

சூர்யாவுடன் மோதும் டாப்ஸி.. சிம்புவின் வெந்து தணிந்தது காடு எப்போது ரிலீஸ்? இன்றைய டாப் 5 பீட்ஸில்!

தமிழ் சினிமாவில் நாள்தோறும் பல்வேறு சுவாரசிய சம்பவங்களும், பல்வேறு படங்களின் அப்டேட்டுகளும் வெளியாகி வருகிறது.

படத்தின் பூஜை, பாடல்கள் வெளியீடு, டீஸர், ட்ரெயிலர் என ஏதாவது ஒரு அறிவிப்பு வெளியான வண்ணம் உள்ளது. அவற்றில் சுவாரசியமான தகவல்களை வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே.

மீண்டும் எப்போது ஷூட்டிங்?

மீண்டும் எப்போது ஷூட்டிங்?

அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்டிஸில் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு பாதி நிறைவடைந்துள்ளதாக கூறியுள்ளார் பிகே. மேலும் இப்படத்தின் மீதி ஷூட்டிங் ஜனவரி மாதத்திற்கு பிறகு தொடங்கும் என்றும் கூறியுள்ளார் பிகே.

வசூலை குவித்த அகண்டா

வசூலை குவித்த அகண்டா

இதேபோல் மோகன் லால் நடிப்பில் பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான மரைக்காயர் படம் எதிர்பார்த்த அளவுக்கு வசூலை பெறாதது குறித்த தகவலை கூறியுள்ளார். அதேநேரத்தில் தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான அகாண்டா படம் வசூலை குவித்துள்ளது குறித்த தகவலையும் கூறியுள்ளார் பிகே.

மீண்டும் விஜயகாந்த்

மீண்டும் விஜயகாந்த்

மேலும் விஜய் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் மழை பிடிக்காத மனிதனா படத்தின் மூலம் நடிகர் விஜயகாந்த் மீண்டும் நடிக்க உள்ள தகவலையும் கூறிள்ளார் பிகே. இந்தப் படத்தில் நடிகர் சரத்குமார் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ள தகவலையும் கூறியுள்ளார் பிகே. இப்படத்தை ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்குகிறார்

எப்போது ரிலீஸ்?

எப்போது ரிலீஸ்?

கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் வெந்து தணிந்தது காடு. இந்தப் படத்தின் போஸ்டர்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இப்படம் வரும் மார்ச் மாதம் ரிலீஸ் செய்யப்படும் என வெளியாகியுள்ள தகவலையும் கூறியுள்ளார் பிகே.

சூர்யாவுடன் மோதும் டாப்ஸி

சூர்யாவுடன் மோதும் டாப்ஸி


இதேபோல் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படத்துடன் டாப்ஸியின் படம் மோதவுள்ளது குறித்த தகவலையும் கூறியுள்ளார் பிகே. எதற்கும் துணிந்தவன் படம் வரும் பிப்ரவரி 4 ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் டாப்ஸி நடிப்பில் உருவாகியுள்ள மித்தாலி ராஜின் பயோ பிக்கான சபாஷ் மித்து படமும் அதே நாளில் ரிலீஸ் ஆகும் தகவலை கூறியுள்ளார் பிகே.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X