»   »  சிம்பு நிறுத்திவிட்டார் ஆனால் தனுஷ் ஆரம்பிச்சுட்டார்...

சிம்பு நிறுத்திவிட்டார் ஆனால் தனுஷ் ஆரம்பிச்சுட்டார்...

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிம்பு அஜீத்தை கை கழுவிய நேரத்தில் தனுஷின் கொடி படத்தில் அஜீத் ரெபரன்ஸ் உள்ளது.

இனி தனது படங்களில் அஜீத் ரெபரன்ஸ் இருக்காது என்று சிம்பு அண்மையில் தெரிவித்தார். அஜீத்தை யாரும் கண்டு கொள்ளாதபோது தான் கொண்டாடியதாகவும், தற்போது தல தலன்னு கொண்டாட ஆள் இருப்பதால் தான் நிறுத்திக் கொள்வதாகவும் சிம்பு கூறினார்.

When Simbu stops, Dhanush starts...

'தல'யை தூக்கி விட நான் யார் என்றும் கூறி அஜீத் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார் சிம்பு. இந்நிலையில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் இன்று வெளியான கொடி படத்தில் அஜீத் ரெபரன்ஸ் உள்ளது.

சிம்பவும், தனுஷும் பகையை மறந்து நண்பர்களாகிவிட்டனர் என்று கூறப்படுகிறது. தனுஷ் சினிமாவில் எந்த உயரத்தை தொட்டால் எனக்கென்ன என சிம்பு அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சிம்பு நிறுத்தியதை தனுஷ் துவங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
When Simbu has stopped doing Ajith reference in his movies, Dhanush has started it with Kodi.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil