குடித்துவிட்டு ஃபுல் போதையில் ஸ்டார் ஹோட்டலில் ரகளை செய்த டாப்ஸி
மும்பை: நடிகை டாப்ஸி பார்ட்டி ஒன்றில் குடித்துவிட்டு மல்லுக்கட்டியது தெரிய வந்துள்ளது.
பாலிவுட்டில் தனது நடிப்பால் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்திருப்பவர் டாப்ஸி. அவரும், யுரி பட புகழ் விக்கி கவுஷலும் மன்மர்ஜியான் படத்தில் சேர்ந்து நடித்தனர். இந்நிலையில் அவர்கள் இருவரும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர்.
அந்த நிகழ்ச்சியில் டாப்ஸி அடித்த கூத்து பற்றி விக்கி தெரிவித்தார்.

டாப்ஸி
மன்மர்ஜியான் பட வேலைகள் முடிந்ததை அடுத்து பார்ட்டி கொடுத்தார்கள். அந்த பார்ட்டியில் நான் மது அருந்திவிட்டு ஃபுல் போதையில் இருந்தேன். ஹோட்டலில் உள்ள தோட்டத்தில் படுத்துக் கொண்டு இங்கு தான் இரவு தூங்குவேன் என்று அடம்பிடித்தேன் என டாப்ஸி தெரிவித்தார்.

விக்கி
படப்பிடிப்பின்போது நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலில் தான் பார்ட்டி நடந்தது. அந்த இரவு டாப்ஸி குடிபோதையில் தோட்டத்தில் படுத்துக் கொண்டு எழுந்து வர மாட்டேன் என்று மல்லுக்கட்டினார். நீங்கள் வராவிட்டால் நான் கிளம்பி விடுவேன் என்று கூறினேன். அப்படியாவது எழுந்து வருவார் என கூறினேன் என்று விக்கி கவுஷல் தெரிவித்தார்.

வருண் தவான்
வருண் தவானுடன் சேர்ந்து நடித்த அனுபவம் சுவாரஸ்யமானது. ஒவ்வொரு ஷாட்டுக்கும் முன்பு வருண் புஷ் அப் பண்ணுவார். அனைத்தும் கச்சிதமாக இருக்க வேண்டும் என்று நினைப்பார். க்ளோசப் ஷாட் பிடிக்கவில்லை என்றால் என்னால் சிறப்பாக செய்ய முடியும் என்பார். உடனே நான் அவரை சமாதானம் செய்வேன் என்று கூறினார் டாப்ஸி.

அபிஷேக் பச்சன்
2018ம் ஆண்டில் வெளியான மன்மர்ஜியான் படம் முக்கோண காதல் கதை கொண்டது. அபிஷேக் பச்சன், விக்கி கவுஷல் மற்றும் டாப்ஸி இடையேயான காதல் பற்றியது மன்மர்ஜியான். அனுராக் கஷ்யப் இயக்கிய அந்த படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்தபோதிலும் ரூ. 40 கோடி தான் வசூல் செய்தது.


Click it and Unblock the Notifications











