என்னையவா கழட்டிவிடுற, முன்னாள் காதலரை பழிவாங்கிய டாப்ஸி

By Siva

Recommended Video

Taapsee Pannu Speech - திரும்ப வந்துட்டேனு கெத்தாக சொல்லிய டாப்சீ | Game Over- வீடியோ

சென்னை: அந்த ஆளு எப்படி என்னை கழற்றிவிடலாம் என்று தனது முதல் காதலரை பழிவாங்கியதாக நடிகை டாப்ஸி முன்பு தெரிவித்தது குறித்து தற்போது மீண்டும் பேசப்படுகிறது.

தமிழ், தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வந்த டாப்ஸி பாலிவுட் பக்கம் முழுக் கவனத்தையும் திருப்பினார். பாலிவுட் சென்ற அவர் போராடினார், பின்னர் தனது நடிப்பால் தனக்கென்று பெயர் எடுத்துவிட்டார். நடிப்புக்கு அதிக ஸ்கோப் உள்ள கதாபாத்திரமா கூப்பிடு டாப்ஸியை என்று இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் கூறும் அளவுக்கு அசத்திக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் டாப்ஸி தனது காதல் வாழ்க்கை பற்றி முன்பு அளித்த பேட்டி குறித்து தற்போது மீண்டும் பேசப்படுகிறது. அந்த பேட்டியில் அவர் கூறியதாவது,

பழிவாங்குதல்

பழிவாங்குதல்

என் முதல் காதல் தோல்வி அடைந்தது. அந்த நபர் என்னை கழற்றிவிட்டார். அது என் ஈகோவை சுட்டுவிட்டது. இனி எந்த ஆளும் நம்மை கழற்றிவிடக் கூடாது என்று முடிவு செய்தேன். மேலும் என் முதல் காதலரை கொடூரமாக தண்டிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். நினைத்தபடி அவரை பழி வாங்கிவிட்டேன். அந்த நபர் இன்று வரை எனக்கு போன் செய்து இப்படி பழிவாங்கிவிட்டாயே என்பார்.

நடிகர்

நடிகர்

நான் இதுவரை சர்தார்ஜியை காதலித்தது இல்லை. தென்னிந்தியர் ஒருவரை காதலித்துள்ளேன். மேலும் நான் இதுவரை எந்த நடிகரையும் காதலித்தது இல்லை. இதை நான் ஒரு பேப்பரில் எழுதி கையெழுத்து போட்டுக் கொடுக்க முடியும். காதலில் ஒரு ஸ்டார் தான் இருக்க வேண்டும், அது நான் தான். எனவே ஒரு ஸ்டாரை(நடிகரை) காதலிக்க மாட்டேன் என்றார் டாப்ஸி.

டாப்ஸி

டாப்ஸி

டாப்ஸி நடிப்பில் அண்மையில் வெளியான கேம் ஓவர் படத்தை பார்த்துவிட்டு அவரின் மிரட்டலான நடிப்பை பாராட்டாதவர்களே இல்லை. விமர்சகர்கள் எல்லாம் டாப்ஸியை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். தற்போது எல்லாம் டாப்ஸியின் படங்கள் வெளியானால் அதை அனைவரும் பாராட்டுகிறார்கள். இது அவரின் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி.

ஆடை

கஷ்டப்பட்டாலும் நடிப்பால் தனி இடத்தை பிடிக்கலாம் என்ற நம்பிக்கையை வளர்ந்து வரும் நடிகைகளுக்கு அளித்துள்ளார் டாப்ஸி. பிற நடிகைகளை பாராட்டவும் அவர் தவறுவது இல்லை. அமலா பாலின் ஆடை டீஸரை பார்த்துவிட்டு மனதார பாராட்டி ட்வீட் போட்டுள்ளார் டாப்ஸி. டாப்ஸியின் ட்வீட்டை பார்த்த அமலா பால் மகிழ்ச்சி அடைந்து நன்றி தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X