அர்னால்டா இருந்து என்ன பிரயோஜனம்...'வணக்கம்' சொல்ல முடியலையே!

By Veera Kumar

சென்னை: ஆனானப்பட்ட ஹாலிவுட் நடிகர் அர்னால்டுக்கு, வணக்கம் என்று தமிழில் ஒரு வார்த்தை கூற முடியவில்லையாம். ஜிம்மில் கிலோ கணக்கில் வெயிட் தூக்கும் அர்னால்டால் ஒற்றை வார்த்தையை கூற முடியாமல் செய்துவிட்டதுதான் தமிழோட வெயிட் என்கிறார்கள் நம்மவர்கள்.

'ஐ' திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவுக்காக சென்னை வந்திருந்த ஹாலிவுட் திரைப்பட நடிகர் அர்னால்ட், தலைமைச் செயலகத்தில் நேற்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து சுமார் அரை மணி நேரம் பேசினார். 'டெர்மினேட்டர்' ஹீரோவை பார்க்க தலைமைச் செயலக ஊழியர்கள் தங்களது அறைகளில் இருந்து வெளியே வந்து காத்திருந்தனர்.

துணை கமிஷனருடன் போஸ்

துணை கமிஷனருடன் போஸ்

அர்னால்ட் அந்த வழியாக சென்றபோது தங்களது செல்போன்களில் போட்டோ எடுத்து புழகாங்கிதம் அடைந்து கொண்டனர். அர்னால்ட்டை புகைப்படம் எடுக்க, பத்திரிகையாளர்கள் திரளாக நின்றிருந்தனர். அதுமட்டுமின்றி தலைமைச் செயலக ஊழியர்களும் கூட்டமாக குழுமினர். அப்போது திடீரென தனது அருகே நின்று கொண்டிருந்த பூக்கடை பகுதி துணை கமிஷனர் டி.செந்தில்குமார் தோளில் கைபோட்டபடி கட்டி பிடித்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தார் அர்னால்ட்.

வணக்கம் சொல்லுங்க பார்ப்போம்..

வணக்கம் சொல்லுங்க பார்ப்போம்..

அப்போது அர்னால்டுக்கு ஒரு ஆசை வந்தது. கூடியிருந்த கூட்டத்தை பார்த்து ஏதாவது சொல்ல வேண்டும் என்று விருப்பப்பட்டார். செந்தில்குமாரிடம் நான் என்ன சொல்லலாம் என்று அர்னால்ட் கேட்டார். அதற்கு செந்தில்குமாரும், "வணக்கம்" என்று சொல்லுங்கள். தமிழிலில் மற்றொருவரை மரியாதையாக கூறும் வார்த்தை இது என்று செந்தில்குமார் விளக்கம் அளித்தார்.

வாயடைத்த அர்னால்ட்

வாயடைத்த அர்னால்ட்

இதையடுத்து கூட்டத்தை பார்த்து கையசைத்த, அர்னால்டு, வணக்கம் என்று கூற முயன்றார். ஆனால் அவரது வாயில் வணக்கம் என்ற வார்த்தை நுழையவில்லை. இதுகுறித்து துணை கமிஷனர் செந்தில்குமார் கூறுகையில் "வணக்கம் என்று கூற அர்னால்ட் ஆசைப்பட்டார், முயற்சியும் செய்தார். ஆனால் அவரால் அந்த வார்த்தையை உச்சரிக்க முடியவில்லை" என்று செந்தில்குமார் கூறினார்.

தமிழின் பாரம் அதிகம்

தமிழின் பாரம் அதிகம்

எந்த வசனத்தையும் எளிதில் கற்றுக்கொள்ளும் தன்மை கொண்டவர்கள் நடிகர்கள். அதிலும் ஹாலிவுட் திரைப்பட நடிகரான அர்னால்ட் தனது பலமான உடல்கட்டுக்காக பெயர் பெற்றவர். ஆனால் தொன்மை தமிழின் பாரத்தை, அவரது நாவால் சுமக்க முடியவில்லை என்றுதான் கூற வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X