கவுண்டமணியின் தாயாரை சந்தித்த விஜய்...திடீரென வைரலாகும் போட்டோக்கள்
சென்னை : கடந்த 2 நாட்களாக விஜய்யின் பழைய போட்டோக்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கப்பட்டு வருகின்றன. சில ஆண்டுகளுக்கு முன் விஜய் பைக்கில் சென்று, பொது மக்களிடம் அட்ரஸ் விசாரித்த வீடியோ நேற்று முதல் வைரலாக்கப்பட்டது.

இந்நிலையில் பிரபல காமெடி நடிகர் கவுண்டமணியின் தாயாரை விஜய் சந்தித்த போட்டோக்கள் இன்று வைரலாக்கப்பட்டு வருகிறது. இந்த போட்டோக்கள் எடுக்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆகிறது. வேலாயுதம் படத்தின் சூட்டிங்கின் போது இந்த போட்டோக்கள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

விஜய், ஜெனிலியா மற்றும் ஹன்சிகாவுடன் நடித்த வேலாயுதம் படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடைபெற்றது. பொள்ளச்சிக்கு அருகில் உள்ள கிராமத்தில் தான் கவுண்டமணியின் தாயார் வசித்து வருகிறார். அதனால் விஜய், மரியாதை நிமித்தமாக டைரக்டர் மோகன் ராஜாவுடன் சென்று கவுண்டமணியின் தாயாரை சந்தித்துள்ளார்.
சிறிது நேரம் அவருடன் பேசிய விஜயும், மோகன் ராஜாவும், அவருடன் போட்டோக்கள் எடுத்துக் கொண்டனர். இந்த போட்டோக்கள் தான் தற்போது வைரலாக்கப்பட்டு வருகின்றன.
Recommended Video
விஜய், கவுண்டமணியுடன் இணைந்து ரசிகன், கோயமுத்தூர் மாப்பிள்ளை போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர்கள் இருவரின் காமெடி காம்போ சூப்பர் ஹிட்டானது.


Click it and Unblock the Notifications











