Chithha - போதும் உங்க புராணம்.. சித்தா பட விழாவில் அறுத்த அஞ்சனா.. பல்பு கொடுத்த பத்திரிகையாளர்கள்
சென்னை: Anchor Anjana (தொகுப்பாளினி அஞ்சனா) சித்தா படத்தின் வெற்றி விழாவில் படம் குறித்து தொகுப்பாளினி அஞ்சனா நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்ததை பார்த்த பத்திரிகையாளர்கள் போதும் பேச்சை நிறுத்துங்கள் என்று கூறினர்.
ஒரு படம் வெற்றி பெற்றதை அடுத்து அதற்காக வெற்றி விழா வைக்கப்படுவது வழக்கம். அதை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினிகள் அந்த விழாவை சுவாரசியமாக நகர்த்தி செல்வதற்காக அரும்பாடு படுவார்கள். அது அவர்களுக்கு நல்ல பெயரையும் பெற்றுத்தரும் சமயத்தில் அவர்களுக்கு சறுக்கலையும் உருவாக்கும். அந்த மாதிரி சறுக்கல்தான் தற்போது அஞ்சனாவுக்கு ஏற்பட்டிருக்கிறது.

சித்தா வெற்றி விழா: சித்தார்த் நடித்து தயாரித்திருக்கும் படம் சித்தா. அருண் குமார் இயக்கியிருக்கும் இந்தப் படம் சமீபத்தில் வெளியானது. பல வருடங்களாக சினிமாவில் சித்தார்த் நடித்து வந்தாலும் அவருக்கு ஒரு மெகா ஹிட் கிடைக்கவே இல்லை என்பதுதான் உண்மை. தற்போது அந்த மெகா ஹிட் சித்தா படத்தின் மூலம் அவருக்கு கிடைத்திருக்கிறது.
செம ரெஸ்பான்ஸ்: பெண் குழந்தைகளுக்கு நடக்கும் பிரச்னையை மையமாக வைத்து எளிமையான திரைக்கதையுடன் அழுத்தமான காட்சிகளுடன் அருண் குமார் படத்தை இயக்கியிருந்தது பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. படத்துக்கு செலிபிரிட்டிகள் முதல் ரசிகர்கள்வரை தங்களது பாராட்டை தெரிவித்துவருகின்றனர். படம் விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் அட்டகாச ரெஸ்பான்ஸை பெற்றிருக்கிறது.
வெற்றி விழா: இந்த சூழலில் சித்தா படத்தின் வெற்றி விழா சென்னையில் நடந்தது. அந்த விழாவை தொகுப்பாளினி அஞ்சனா தொகுத்து வழங்கினார். விழா ஆரம்பிப்பதற்கு முன் படம் குறித்து பேச ஆரம்பித்தார். சிறிது நேரம் பேசிவிட்டு விருந்தினர்களை மேடைக்கு அழைப்பார் என்று விழாவில் பங்கேற்றவர்கள் கீழே காத்திருந்தனர். ஆனால் அஞ்சனாவோ சித்தா படம் பற்றி நெடுநேரம் பேசிக்கொண்டே இருந்தார். சொல்லப்போனால் அவரே ஒரு சிறப்பு விருந்தினர் போல் நினைத்துக்கொண்டு விழாவுக்கு வந்திருந்த விருந்தினர்களையும் படக்குழுவினரையும் மறந்தேவிட்டார். அந்த அளவுக்கு படம் பற்றி நீட்டி முழங்கிக்கொண்டிருந்தார்.
பொறுமை இழந்த பத்திரிகையாளர்களும், கேமரா மேன்களும் அஞ்சனாவின் பேச்சை எப்படி முடிக்க வைப்பது என்பது தெரியாமல் ஒருகட்டத்தில் கைத்தட்டிவிட்டு போதும் போதும் என்று கூறினார்கள். இதனால் தர்ம சங்கடத்துக்கு ஆளான அஞ்சனா உடனடியாக படக்குழுவினரையும் விருந்தினர்களையும் மேடைக்கு அழைத்தார்.
விழாவை முடித்த பிறகு பத்திரிகையாளர்களிடமும், கேமரா மேன்களிடமும் சென்ற அஞ்சனா எதற்காக இப்படி என்னை இன்சல்ட் செய்தீர்கள். ஒரு நல்ல விஷயத்தைத்தானே பேசிக்கொண்டிருந்தேன் என்று கூறினார். அதற்கு பத்திரிகையாளர்களோ நல்ல விஷயமாக இருந்தாலும் ஒரு அளவுதான் பேச வேண்டும் இவ்வளவு நேரமா பேசுவது என்ற தொனியில் ரியாக்ஷன் கொடுத்துவிட்டு அவரை சமாதானப்படுத்தி நிலைமையை சீராக்கினர்.


Click it and Unblock the Notifications











