ப்பா என்னா கோபம்.. தேவையில்லாம மூக்கை நுழைக்கிறவங்கள பார்த்தா வனிதாவுக்கு பத்திக்கிட்டு வருமாம்!

சென்னை: நடிகை வனிதா மற்றும் பாலா காம்பினேஷனில் மேலும் ஒரு கலக்கப்போவது யார் நிகழ்ச்சியின் சூடான வீடியோ வைரலாகி வருகிறது.

பல்வேறு சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் நடிகை வனிதா. கடந்த பிக்பாஸ் 3 சீசனில் பங்கேற்ற பிறகு தொடர்ந்து செய்திகளில் அடிபட்டு வருகிறார்.

மூன்று குழந்தைகளுக்கு தாயான வனிதா கடந்த ஜூன் மாதம் பீட்டர் பால் என்பதை திருமணம் செய்தார்.

மல்லுக்கு நின்ற வனிதா

மல்லுக்கு நின்ற வனிதா

இதனையறிந்த அவரது முதல் மனைவி தகராறில் ஈடுபட பல திரை பிரபலங்கள் வனிதாவுக்கு எதிராய் குரல் கொடுத்தனர். பீட்டர் பாலுக்காக வேண்டி பலருடனும் மல்லுக்கு நின்று எதிரியாக்கி கொண்டார் வனிதா.

வெறுப்பேற்றிய வனிதா

வெறுப்பேற்றிய வனிதா

அதோடு தாங்கள் மேட் ஃபார் ஈச் அதர், ரொம்பவே அன்யோன்யமாய் இருக்கிறோம் என்பதை காட்டும் வகையில் லிப்லாக், படுக்கையறை போட்டோக்களையும் ஷேர் செய்து வெறுப்பேற்றினார் வனிதா.

குடிதான் முக்கியம்

குடிதான் முக்கியம்

இந்நிலையில் கடந்து சில நாட்களுக்கு முன்பு தனது கணவர் பீட்டர் பாலை நம்பி தான் ஏமாந்து விட்டதாகவும் தான் தோற்றுப்போயி நிற்பதாகவும் கூறி கண்ணீர் விட்டார். பீட்டர் பால் மீண்டும் குடிக்கு அடிமையாகிவிட்டதாகவும் அவருக்கு தன்னை விட குடிதான் முக்கியம் என்றும் கூறி கண்ணீர் விட்டார்.

கண்ணும் கருத்துமாய்

கண்ணும் கருத்துமாய்

மேலும் தான் பீட்டல் பாலை பிரிந்துவிட்டதாகவும் கூறினார் வனிதா. தனது தனிப்பட்ட வாழ்க்கையில் எத்தனையோ பிரச்சனைகள் இருந்த போதும், தனது வேலையில் கண்ணும் கருத்துமாய் இருந்து வருகிறார்.

வைரல் புரமோ

வைரல் புரமோ

தனது பர்சனல் வீடியோவை போட்டோ காசு பார்த்து வரும் வனிதா, இந்த சூழ்நிலையிலும் தான் ஜட்ஜாக பங்கேற்கும் கலக்கப்பபோவது யார் நிகழ்ச்சயில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் நாளைய நிகழ்ச்சிக்கான கலக்கப்போவது யார் நிகழ்ச்சியின் புரமோ வெளியாகியுள்ளது.

பாலாவை கிழித்துவிட்டு..

பாலாவை கிழித்துவிட்டு..

இந்த புரமோ கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான புரமோவின் நீட்சியாக உள்ளது. இதுக்கு பேரு கன்டென்ட்டா, இது காமெடியா என பாலாவை கிழித்துவிட்ட புரமோவின் தொடர்ச்சியாக உள்ளது.

வனிதாவை வச்சு செய்கிறார்

வனிதாவை வச்சு செய்கிறார்

இதில் தொடர்ந்து வனிதாவிடம் கேள்விகளை கேட்கிறார் மகேஷ். ஆரம்பமே அசத்தலாக உள்ளது புரமோ. முடிச்சூரில் முந்திரி கேக் ஆர்டர் உள்ளது என ஆரம்பிக்கும் பாலா இதிலும் வனிதாவை வச்சு செய்கிறார்.

மூக்கை நுழைக்கிறவங்கள பார்த்தா..

மூக்கை நுழைக்கிறவங்கள பார்த்தா..

உங்களை இவ்ளோ பேசுகிறானே, உங்களுக்கு கொஞ்சம் கூட கோவம் வரவில்லையா? உங்களுக்கு எப்போதான் கோவம் வரும் என கேட்கிறார். அதற்கு பதில் சொல்லும் வனிதா, சம்மந்தம் இல்லாத விஷயத்துல தேவையில்லாம பேசுறவங்களையும் மூக்கை நுழைக்கிறவங்களையும் பார்த்தாதான் கோவம் வரும் என்கிறார் வனிதா.

டெரர் ரியாக்ஷன்

டெரர் ரியாக்ஷன்

அப்போது வனிதா கொடுக்கும் ரியாக்ஷன் பயங்கர டெரராக உள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள், இதெல்லாம் ஒரு காமெடியா என கேட்டுள்ளனர். இருந்த போதும் வனிதாவின் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X