For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  வாழும் காலத்தில் மன அழுகைச் சத்தம் யாருக்கும் கேட்பதில்லை.. வெங்கட்டின் சத்திய வார்த்தை

  |

  சென்னை: நடிகர் வெங்கட் சுபாவின் பேச்சும் சரி எழுத்தும் சரி ரொம்ப அருமையாக இருக்கும். அவரது நண்பர்கள் பலரும் கூட அவரது பேச்சுக்காகவே நட்பாகியிருப்பார்கள். அந்த அளவுக்கு வெளிப்படையாக, மனதார பேசிப் பழகக் கூடிய ஒரு அரிய நபர்தான் வெங்கட் சுபா.

  திரையுலகில் முகத்திற்கு ஒன்றும், பின்னால் ஒன்றுமாக பேசுவோர்தான் 90 சதவீதம் பேர் இருப்பார்கள். ஆனால் வெங்கட் அப்படி இல்லை. நேருக்கு நேர் என்ன பேசுகிறாரோ அதையேதான் பின்னாலும் பேசுவார். வெளிப்படையானவர்.

  போயிட்டீங்களே அப்பா.. வெங்கட் சுபாவின் மரணம்.. கதறி அழுத ரச்சிதா மகாலட்சுமி போயிட்டீங்களே அப்பா.. வெங்கட் சுபாவின் மரணம்.. கதறி அழுத ரச்சிதா மகாலட்சுமி

  அதை விட சக கலைஞர்களைத் தட்டிக் கொடுத்து ஊக்குவிப்பதில் அவருக்கு நிகர் அவர்தான். பாசக்கார மனிதர். பகட்டே இல்லாமல் பேசக் கூடியவர். .சக நடிகர்களின் வளர்ச்சியிலும், அவர்களது வாழ்க்கையிலும் முக்கியப் பங்கு வகித்தவர்.

  உண்மைகள் இப்படித்தான்

  உண்மைகள் இப்படித்தான்

  நடிகர் வடிவேல் பாலாஜி இறந்தபோது அவர் தெரிவித்திருந்த இரங்கல், வெறுமனே ஒரு மனிதன் மரணத்தைக் கண்டு அழுததாக இருக்கவில்லை. மாறாக, திரையுலகில், டிவி உலகில் எப்படிப்பட்ட வாழ்க்கையை பலர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்பதை எடுத்துரைப்பதாக அது இருந்தது. பலர் இப்படித்தான் வாழ்ந்து கொண்டுள்ளனர். நம்மை சிரிக்க வைக்கும் பலர் உள்ளுக்குள் அழுதபடிதான் இருக்கிறார்கள். இதுதான் எதார்த்தம்.

  இனிய மனசு

  இனிய மனசு

  வடிவேல் பாலாஜி மரணத்தின்போது வெங்கட் சுபா எழுதியிருந்த இரங்கல் குறிப்பு இதோ... இவருடன் ஒரு தொலைக்காட்சித் தொடரில் நடித்தேன். ஆரோக்கியமாக திடமாக உடலும் வெள்ளந்தியான மனமும் நல்ல திறமையும் கொண்டவராக இருந்தார் . இனிமையாக பழகினார் ... அவரது மரணம் வளரும் கலைஞர்கள் குறிப்பாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொடர்கள் ஆகியவற்றில் நடிப்பதை ஜீவாதாரமாக கொண்ட பலரை உலுக்கி எடுத்துள்ளது

  சில மாதங்கள் ஆகும்

  சில மாதங்கள் ஆகும்

  நடித்தால் அன்றே பணம் வராது ... சில மாதங்கள் ஆகும் ... எத்தனை நாட்கள் வேலை கிடைக்கும் என தெரியாது ..

  எப்போது வேண்டாம் என சொல்வார்கள் தெரியாது ... சில சந்தர்ப்பங்களில் வராமலே போகலாம் ... சரியான காப்பீடு திட்டம் கிடையாது ... தொழில் பாதுகாப்பு கிடையாது ...

  பலருக்கு வேதனை

  பலருக்கு வேதனை

  சிலருக்கு அதிருஷ்டம் .. பலருக்கு வேதனை .. இதுதான் உண்மை ... வடிவேல் பாலாஜியின் மரணம் குறித்த வீடியோக்கள் பல மில்லியன் வியூஸ்.. அதனை ஒளிபரப்பிய காட்சி ஊடகங்களுக்கு வந்திருக்க கூடிய வருமானம் சில லட்சம் இறந்த போதும் அள்ளித் தந்திருக்கிறார். அவர் போன்றவர்கள் வாழும் போது மரணத்துடன் போராடும் போது கிள்ளித்தரவும் யாரும் இல்லை ...

  மன அழுகைச் சத்தம்

  மன அழுகைச் சத்தம்

  நகைச்சுவை கலைஞர்கள்தான் ... மகிழ்விப்பவர்கள்தான் .. வாழும் காலத்தில் அவர்கள் மன அழுகைச் சத்தம் யாருக்கும் கேட்பதில்லை ... துயரம் துயரம் ஆறுதல் சொல்ல முடியாத துயரம் .. என்று தனது மனதில் தோன்றிய உண்மைகளை கொட்டியிருந்தார் வெங்கட் சுபா. இன்று அவரும் போய் விட்டார். அவரது ஆறுதலுக்காகவும், அரவணைப்புக்காகவும் ஏங்கும் வளரும் கலைஞர்களுக்கு இனி வெங்கட் மானசீக குருவாக மட்டுமே இருப்பார்.

  English summary
  Actor Venkat Subha exposed the real lives of TV stars when TV actor Vadivel Balaji died.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X