»   »  அஜீத் பட வசனங்களை கேட்டு புல்லரித்துப் போய் நின்ற விஜய்

அஜீத் பட வசனங்களை கேட்டு புல்லரித்துப் போய் நின்ற விஜய்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அஜீத்தின் வீரம் படத்தின் வசனங்களை இளைய தளபதி விஜய் பாராட்டியதாக இயக்குனர் பரதன் தெரிவித்துள்ளார்.

தில், தூள், கில்லி, மதுர ஆகிய படங்களுக்கு வசனம் எழுதிய பரதன் அழகிய தமிழ் மகன் படம் மூலம் இயக்குனர் ஆனார். அவரின் முதல் ஹீரோ இளைய தளபதி விஜய் தான்.


சிம்புவின் ஒஸ்தி, அஜீத்தின் வீரம் படங்களுக்கும் வசனம் எழுதியவர் பரதனே.


பைரவா

பைரவா

தனது முதல் ஹீரோவான விஜய்யை வைத்து பைரவா படத்தை இயக்கி வருகிறார் பரதன். பைரவா படம் பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


கில்லி

கில்லி

நான் பைரவா படத்தின் கதையை கூற விஜய்யை பார்க்க சென்றேன். கில்லி படப்பிடிப்பின்போது அவர் என்னிடம் எப்படி நடந்து கொண்டாரோ அதே போன்று அன்பாக நடந்து கொண்டார் என்கிறார் பரதன்.


வீரம்

வீரம்

என்னை அன்புடன் வரவேற்ற விஜய் அஜீத்தின் வீரம் படத்திற்காக நான் எழுதிய வசனங்களை பாராட்டினார். வீரம் படத்தில் வரும் சில வசனங்களை கேட்டு தனக்கு புல்லரித்ததாக அவர் கூறினார் என பரதன் தெரிவித்துள்ளார்.


விஜய்

விஜய்

பைரவா கதையை கேட்டதும் விஜய்க்கு பிடித்துவிட்டது. இந்த படத்தை நாம் கண்டிப்பாக பண்றோம் பரதன் என்று கூறி எனக்கு கை கொடுத்தார் என்று பரதன் கூறியுள்ளார்.


English summary
Bairavaa director Bharathan said that Vijay appreciated him for the dialogues he had written for Ajith starrer Veeram.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil