இப்ப மட்டும் நான் கண்ணுக்கு தெரியிறேனா?: சீதக்காதி இயக்குனரிடம் கேட்ட விஜய் சேதுபதி
Recommended Video

சென்னை: இப்ப மட்டும் நான் கண்ணுக்கு தெரிகிறேனோ என்று சீதக்காதி இயக்குனரிடம் விஜய் சேதுபதி கேட்டுள்ளார்.
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை அடுத்து பாலாஜி தரணிதரன் இயக்கிய சீதக்காதி படம் இன்று வெளியாகியுள்ளது. இது விஜய் சேதுபதி படம் என்று கூறப்பட்டாலும் அவர் வெறும் 40 நிமிடங்கள் தான் வருகிறார்.
இந்நிலையில் படம் குறித்து பாலாஜி பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது,

தாக்கம்
5 ஆண்டுகளுக்கு முன்பு மேடை நாடகம் ஒன்றை பார்த்தேன். பள்ளியில் படித்த போது ஒரு சில மேடை நாடகங்களை பார்த்தேன். அதன் பிறகு பார்க்கவில்லை. அப்படி இருக்கும் அந்த மேடை நாடகம் என்னுள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் பிறகு அந்த நாடகத்தில் நடித்தவர்களுடன் நேரம் செலவிட்டேன். டிவியில் பார்த்தவர்களை நேரில் பார்த்ததில் மகிழ்ச்சியாக இருந்தது.

கதை
நாடகத்தை பார்க்க வெகு சிலரே வருகின்றபோதிலும் அரங்கு நிறைந்திருப்பது போன்று நினைத்துக் கொண்டு அந்த கலைஞர்கள் நடிப்பது என்னுள் ஏதோ செய்தது. அதில் இருந்து பிறந்த கதை தான் சீதக்காதி. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை முடித்த உடன் சீதக்காதி கதை தயாராகிவிட்டது.

விஜய் சேதுபதி
75 வயது உள்ள பிரபல நடிகரை சீதக்காதி படத்தில் நடிக்க வைக்க நினைத்தேன். சரியான ஆள் கிடைக்காததால் படத்தை கைவிட்டேன். 2013ம் ஆண்டு சீதக்காதி கதை குறித்து அறிந்த விஜய் சேதுபதி என்னை அணுகி நான் நடிக்கிறேன் என்றார். அவர் ஜோக்கடிக்கிறார் என்று நினைத்தேன். அதன் பிறகு 5 ஆண்டுகள் கழித்து மீண்டும் விஜய் சேதுபதியிடமே போய் நின்றேன்.

ஹீரோ
நான் மீண்டும் விஜய் சேதுபதியை அணுகியபோது இப்போ தான் நான் கண்ணுக்கு தெரிகிறேனா, அப்போ என் மீது நம்பிக்கை இல்லையா என்று கேட்டு கிண்டல் செய்தார் அவர். ஒரு கதை பிடித்துவிட்டால் உடனே நடிக்க ஒப்புக் கொள்வார் விஜய் சேதுபதி. அவருடன் சேர்ந்து பணியாற்றியது இனிமையான அனுபவம் என்கிறார் பாலாஜி.


Click it and Unblock the Notifications











