இந்தா வந்துருச்சுல்ல.. தளபதி 65 படத்தின் பணிகள் எப்போது தொடங்கும்.. சுடச்சுட பரவும் தகவல்!
சென்னை: விஜய் நடிக்கும் தளபதி 65 படத்தின் தொடக்கப் பணிகள் குறித்த தகவல்கள் தீயாய் பரவி வருகிறது.
நடிகர் விஜயின் மாஸ்டர் திரைப்படம் கடந்த 13ஆம் தேதி ரிலீஸானது. தியேட்டரிலும் ஓடிடி தளத்திலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமே ரிலீஸாக வேண்டிய படம், லாக்டவுன் காரணமாக இந்த ஆண்டு வெளியானது.

எப்போது தொடங்குவார் விஜய்?
இந்நிலையில் நடிகர் விஜய் அடுத்து நடிக்கும் தளபதி 65 படத்தின் படப்பிடிப்பை எப்போது தொடங்குவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. வழக்கமாக விஜய் தனது முந்தைய படம் ரிலீஸ் ஆன அடுத்த மாதத்திலேயே தனது அடுத்த படத்திற்கான பணிகளில் இறங்கி விடுவார்.

ஏப்ரலில் தொடக்கம்..
ஆனால் இம்முறை விஜய் கொஞ்சம் கூடுதல் நேரம் எடுப்பார் என்று தெரிகிறது. அதன்படி வரும் ஏப்ரல் மாதம் விஜய் தனது தளபதி 65 படத்தின் படப்பிடிப்பை தொடங்குவார் என தெரிகிறது. விஜயின் தளபதி 65 படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க உள்ளார்.

டாக்டர் படம்
தளபதி 65 படத்துக்காக நெல்சனுக்கு இரண்டு மாதங்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார் விஜய். தற்போது நெல்சன் திலீப்குமார், சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தை இயக்கி வருகிறார்.

டப்பிங் பணிகள்
இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து போஸ்ட் புரெடெக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் சிவகார்த்திகேயன் தனது டப்பிங் பணிகளை முடித்துவிட்டதாக தெரிவித்தார்.

ஜூன்.. ஜூலையில்..
இந்நிலையில் டாக்டர் படம் வரும் மார்ச் 26ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நிச்சயம் ஏப்ரலில் தளபதி 65க்கான பணிகள் தொடங்கிவிடும் என தெரிகிறது. ஏப்ரலில் படப்பிடிப்பு தொடங்கினால் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் படப்பிடிப்புகள் நிறைவடைந்து விடும் என தெரிகிறது.

பூஜைக்கு முன்னதாக..
இதனை தொடர்ந்து இந்த ஆண்டு இறுதிக்குள் தளபதி 65 படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கின்றனர் ரசிகர்கள். தளபதி 65 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். மற்ற தகவல்கள் பூஜைக்கு முன்பே தொடங்கும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











