For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆஸ்கர் விருது விழா எங்கு, எப்பொழுது நடக்கிறது?: தமிழர்கள் ஏன் கட்டாயம் பார்க்க வேண்டும்?

    By Siva
    |

    சென்னை:

    ஆஸ்கர் விருது விழாவை இந்தியாவில் உள்ளவர்கள் எப்பொழுது, எப்படி பார்க்கலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

    91வது ஆஸ்கர் விருது விழா வரும் 24ம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெற உள்ளது. தொகுப்பாளர் இல்லாமலேயே இந்த ஆண்டு விழா நடைபெறுகிறது.

    நடிகர் கெவின் ஹார்ட் விலகியதை அடுத்து ஆஸ்கர் விழாவை தொகுத்து வழங்க யாரும் முன்வரவில்லை.

    Exclusive குஷ்பு டீம் என்னை ஏமாற்றிவிட்டது.. கொந்தளிக்கும் லட்சுமி ஸ்டோர்ஸ் நடிகை நந்திதா ஜெனிபர்!

    ஆஸ்கர்

    ஆஸ்கர்

    ஆஸ்கர் விருது விழாவை இந்தியாவில் உள்ளவர்கள் 25ம் தேதி காலை 6.30 மணியில் இருந்து நேரடியாக பார்க்கலாம். ஹாட்ஸ்டாரில் மட்டுமே இந்த விழாவை நேரடியாக பார்க்க முடியும்.

    சிவப்புக் கம்பளம்

    சிவப்புக் கம்பளம்

    ஆஸ்கர் விழாவின் சிவப்பு கம்பள நிகழ்ச்சியை ட்விட்டரில் நேரடியாக ஒளிபரப்புகிறார்கள். 25ம் தேதி காலை 6.30 மணியில் இருந்து அதை https://twitter.com/theacademy என்ற ட்விட்டர் கணக்கில் பார்க்கலாம்.

    ரோமா

    ரோமா

    91வது ஆஸ்கர் விருதுக்கு அதிக பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ள படங்கள் தி ஃபேவரைட் மற்றும் நெட்பிளிக்ஸின் ரோமா ஆகும். இரண்டுமே தலா 10 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

    விருது

    விருது

    மாதவிடாய் பற்றி எடுக்கப்பட்ட படம் Period. End of Sentence. மாதவிடாய் குறித்த மூட நம்பிக்கைகளை இந்திய பெண்கள் எப்படி எதிர்த்து போராடுகிறார்கள் என்பதை பற்றிய படம். மேலும் நிஜமான பேட்மேனான கோவையை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தத்தின் சிறப்பான பணியை பற்றி பேசும் இது Documentary short subject பிரிவில் ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் முருகானந்தத்திற்காக ஆஸ்கர் விழாவை தமிழர்கள் பார்க்க வேண்டும்.

    English summary
    Oscars 2019 will be held in Los Angeles on february 24th. People in India can watch it live on february 25th from 6.30 am onwards.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X