அஜித், ரஜினிக்கு புரிந்தது ரசிகர்களுக்கு எப்பொழுது புரியும்?
சென்னை: விஸ்வாசம் ட்ரெய்லர் வெளியான பிறகு அஜித், ரஜினி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மோதிக் கொண்டிருக்கிறார்கள்.
ரஜினியின் பேட்ட ட்ரெய்லரில் வந்த வசனங்களுக்கு பதிலடி கொடுப்பது போன்று உள்ளது விஸ்வாசம் ட்ரெய்லரில் அஜித் பேசிய வசனங்கள். அதிலும் குறிப்பாக பொண்டாட்டி, பொண்ணு விபரத்தை எல்லாம் கூறி ஒத்தைக்கு ஒத்த வாடா என்று அஜித் கூறுவது ரஜினியை பார்த்து தான் என்று ரசிகர்களாக முடிவு செய்துவிட்டனர்.
இதை பார்த்த ரஜினி ரசிகர்கள் கடுப்பாகிவிட்டனர்.

சமூக வலைதளங்கள்
விஸ்வாசம் ட்ரெய்லர் வெளியானதில் இருந்து அஜித், ரஜினி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சீரியஸாக மோதிக் கொண்டிருக்கிறார்கள். இடையே ஒரு பிரபல நடிகரின் ரசிகர்கள் வேறு அவ்வப்போது தூண்டிவிடும் வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
தூண்டுதல்
ரஜினி, அஜித் ரசிகர்கள் இப்படி மோதிக் கொள்வதை பார்த்து சிலர் சந்தோஷப்பட்டாலும் இதெல்லாம் நன்றாக இல்லை. நிஜத்தில் அஜித் ரஜினி மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளார். ரஜினியும் அஜித் மீது மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளார்.
ரஜினி
அஜித்தும், ரஜினியும் பேசிய வசனங்கள் அவரவர் படங்களின் வில்லன்களை பார்த்து என்பதை புரிந்து கொண்டு ரசிகர்கள் அமைதியாக இருந்தால் நல்லது. படத்திற்காக நடிப்பதால் அஜித்தும், ரஜினியும் அமைதியாக இருக்கிறார்கள். இது வெறும் நடிப்பு என்று அவர்களுக்கு புரிந்தது ரசிகர்களுக்கு என்று புரியும்?

அமைதி
அஜித்தும், ரஜினியும் சொன்னால் தான் அமைதியாக இருப்போம் என்று இருக்க வேண்டாம். படத்தை படமாக பார்த்தால் இந்த சண்டையே வராது. எந்த படம் நன்றாக இருக்கிறதோ அது ஓடும். கதை இல்லை என்றால் எவ்வளவு பெரிய நடிகர் நடித்தாலும் படம் ஓடாது. இதை தமிழக ரசிகர்கள் பல முறை நடிகர்களுக்கு புரிய வைத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











