ஐதராபாத்தில் விரைவில் தொடங்குகிறது அடுத்த ஷெட்யூல்.. அஜித்தின் 'வலிமை' ரிலீஸ் எப்போது?

By

சென்னை: அஜித்தின் வலிமை படம் எப்போது ரிலீஸ் ஆகிறது என்ற தகவல் தெரிய வந்துள்ளது.

Recommended Video

BALA Vs AARI இதில் யார் உண்மையாக இருப்பது? | FilmiBeatTamil

அஜித் இப்போது 'வலிமை' படத்தில் நடித்து வருகிறார். இதில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

அஜித்தின் 'நேர்கொண்ட பார்வை'யை அடுத்து இதையும் ஹெச்.வினோத் இயக்கி வருகிறார்.

ஹூமா குரேஸி

ஹூமா குரேஸி

ஶ்ரீதேவியின் கணவரும் பிரபல இந்தி தயாரிப்பாளருமான, போனி கபூர் தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். அஜித் ஜோடியாக இந்தி நடிகை ஹூமா குரேஸி நடிக்கிறார். இவர் ரஜினிகாந்தின் 'காலா' படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.

தெலுங்கு நடிகர்

தெலுங்கு நடிகர்

இந்தப் படத்தில் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடிக்கிறார். 100 படத்தில் அதர்வாவுக்கு வில்லனாக நடித்த ராஜ் ஐயப்பாவும் வில்லனாக நடிக்கிறார். வலிமை படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் நடந்து வந்தது. அடுத்தக் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடந்தது.

கொரோனா காரணமாக

கொரோனா காரணமாக

கொரோனா காரணமாக, படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு பின்னர் மீண்டும் தொடங்கியது. சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த படப்பிடிப்பில், சேசிங் காட்சி ஷூட்டிங்கின் போது, அஜித் பைக்கில் இருந்து விழுந்து காயம் அடைந்தார். லேசான காயம் என்று கூறப்பட்டது. இதனால் ஷூட்டிங் நிறுத்தப்பட்டது.

தயாராகி விட்டது

தயாராகி விட்டது

இதையடுத்து அடுத்த கட்டப் படப்பிடிப்புக்கு வலிமை குழு தயாராகி விட்டது. இதையும் ஐதராபாத்திலேயே நடத்தப் படக்குழு முடிவு செய்துள்ளனர். இதற்காக செட் அமைக்கும் பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டன. இன்னும் ஓரிரு நாட்களில் படக்குழுவினர் அங்கு செல்கின்றனர்.

கோடை விடுமுறை

கோடை விடுமுறை

இந்த ஷெட்யூலை ஜனவரிக்குள் முடிக்கத் திட்டமிட்டுள்ளனர். இதுவரை படமாக்கப்பட்ட அனைத்துக் காட்சிகளின் எடிட்டிங் பணிகளையும் முடித்துவிட்டது படக்குழு. அடுத்த 3 மாதங்களில் இறுதிக்கட்டப் பணிகளை முடித்துக் கோடை விடுமுறைக்குப் படத்தை வெளியிட்டுவிட வேண்டும் என முடிவு செய்துள்ளனர்.

ஆக்‌ஷன் காட்சிகள்

ஆக்‌ஷன் காட்சிகள்

இதற்கு அஜித்தும் சம்மதம் தெரிவித்துள்ளார். இதனால் படக்குழு தீவிரமாகக் களமிறங்கியுள்ளது. இந்த படத்தின் ஆக்‌ஷன் காட்சிகள் மிரட்டலாக, இதுவரை பார்த்திராத வகையில் இருக்கும். ரசிகர்கள் ஆச்சரியப்பட பல விஷயங்கள் படத்தில் இருக்கிறது என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X