டிசம்பர் 24-ல் வெளியாகிறதா அல்லு அர்ஜுனின் புஷ்பா!
ஹைதராபாத் : அல்லு அர்ஜுன் முதல் முறையாக முரட்டுத்தனமான கதாபாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம் புஷ்பா.
ரங்கஸ்தலம் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் சுகுமார் இப்படத்தை இயக்கி வர ரஷ்மிகா மந்தனா இதில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
அல்லு அர்ஜுனுக்கு வில்லனாக நடிப்பதாக விஜய் சேதுபதி, ஆர்யா உள்ளிட்ட பல பெயர்கள் அடிபட்டாலும் கடைசியாக பகத் பாசில் வில்லனாக நடித்து வரும் நிலையில் வரும் டிசம்பர் 24ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை குறிவைத்து புஷ்பா வெளியாகிறது என்ற தகவல் கசிந்துள்ளது.

ரஃப் டஃப்பான
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள நடிகர் அல்லு அர்ஜுன் இதுவரை பல கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் முதல் முறையாக ரஃப் டஃப்பான முரட்டுத்தனமான கதாபாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம் புஷ்பா. ஆந்திர காட்டுப் பகுதிகளில் சட்டவிரோதமாக கடத்தப்படும் செம்மரக் கடத்தலை பற்றிய படமாக இப்படம் உருவாகி வருகிறது.

லாரி டிரைவர்
சென்ற ஆண்டு தொடங்கப்பட்ட இதன் படப்பிடிப்பு ஆந்திராவில் உள்ள காட்டுப் பகுதியில் நடைபெற்று வந்தது. இந்த படத்தில் அல்லு அல்லு அர்ஜுன் வெறித்தனமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இவரது கதாபாத்திரத்தின் பெயர் புஷ்பராஜ் , லாரி டிரைவர் வேடத்தில் நடித்துள்ளார்.

அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக
தமிழ்,தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என போட்டி போட்டுக்கொண்டு தங்களது படங்களில் ரஷ்மிகா மந்தனாவை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்கள் வெய்டிங்கில் இருக்க இப்பொழுது அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக புஷ்பா படத்தில் நடித்துள்ளார்.

கடைசியாக பகத் பாசில்
புஷ்பாவின் வில்லனாக நடிக்க முதலில் விஜய் சேதுபதியை அணுகியதாகவும் தேதிகள் இல்லாததால் அதிலிருந்து விஜய் சேதுபதியை விலகியதாகவும் பின் ஆர்யாவின் பெயரும் அடிபட்டது. கடைசியாக பகத் பாசில் இதில் வில்லனாக நடிக்கிறார்.

கிறிஸ்துமஸ் பண்டிகையை
பெரும் எதிர்பார்ப்பில் தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் உருவாகி வரும் புஷ்பா படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி பட்டையை கிளப்பியது. இந்த நிலையில் வரும் டிசம்பர் 24ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை குறிவைத்து புஷ்பாவை ரிலீஸ் செய்ய படக்குழு தயாராகி வருவதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











