இத்தனை நாட்களுக்குள் ஜகமே தந்திரம் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படுமாம்!
சென்னை: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் ஜூன் 18ம் தேதி வெளிவரவுள்ள படம் ஜகமே தந்திரம்.
இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
மிகவும் எதிர்பார்ப்பில் உள்ள இந்த படம் ஜூன் 18ம் தேதி நேரடியாக Netflix ல் வெளிவரவுள்ளது.

லண்டன் தாதா
ஜூன் 1ம் தேதி வெளியான இந்த படத்தின் ட்ரைலர் சமூக வலைத்தளங்களில் வைரலானது. ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த ட்ரைலர் பல ரசிகர்களை கவர்ந்தது. ட்ரைலரில் தனுஷ் பேசும் வசனமான "சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா" ட்ரெண்டிங் ஆனது.

நல்ல வரவேற்பு
ஏற்கனவே இந்த படத்தின் ரகிட்ட ரகிட்ட, புஜ்ஜி, நேத்து ஆகிய பாடல்கள் வெளியாகி வைரலானது. இதையடுத்து நேற்று முன்தினம் வெளியான படத்தின் மீதமுள்ள பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. சந்தோஷ் நாராயணனின் இசை பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு
இந்த படம் கேங்ஸ்டர் படமாக இருக்கும் என அனைவரும் எண்ணிய நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ஈழம் சார்ந்த அரசியலையும் கதையில் சேர்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களை மேலும் எதிர்பார்க்க செய்துள்ளது.

1 அல்லது 2 மாதங்கள்
இந்த படத்தின் satellite rights ஐ ஸ்டார் விஜய் தொலைக்காட்சி வாங்கியுள்ள நிலையில் இந்த படம்
Netflix ல் வெளியான 1 அல்லது 2 மாதங்களில் டிவியில் ஒளிபரப்பப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. படம் வெளியாகும் போது படத்தில் இடம்பெறாத பாடல்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யும் போது இடம்பெறும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











