தனுஷ் - அனிருத்தின் திருச்சிற்றம்பலம் ஆடியோ லாஞ்ச்.. சன் டிவியில் எப்போ வருது தெரியுமா?

சென்னை: கடந்த வாரம் நடந்து முடிந்த நடிகர் தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தின் இசை வெளியீட்டு விழா சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் அறிவிப்புடன் புதிய புரமோ ஒன்று வெளியாகி உள்ளது.

இயக்குநர் ஜவஹர் மித்ரன் இயக்கத்தில் தனுஷ், நித்யா மேனன், பிரியா பவானி சங்கர் மற்றும் ராஷி கன்னா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் மற்றும் அனிருத் வெள்ளை வேட்டி சட்டையில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நீண்ட கால பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

கொலவெறி பாய்ஸ்

கொலவெறி பாய்ஸ்

யூடியூப் டிரெண்டிங் என்றால் என்னவென்றே தெரியாமல் இருந்த தமிழ் சினிமாவுக்கு ஒய் திஸ் கொலவெறி பாடல் மூலம் உலகளவில் நமது படைப்புகளையும் பாடல்களையும் கொண்டு சேர்க்கலாம் என்பதை சொல்லிக் கொடுத்தனர். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ், சிவகார்த்திகேயன் மற்றும் ஸ்ருதிஹாசன் நடித்த 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் அனிருத்.

ராக்ஸ்டார் அனிருத்

ராக்ஸ்டார் அனிருத்

இந்த ஆண்டு மட்டும் பீஸ்ட், டான், விக்ரம், திருச்சிற்றம்பலம் என அடுத்தடுத்து அனிருத் இசையமைப்பில் பல பெரிய படங்கள் வெளியாகி வருகின்றன. மேலும், இந்தியன் 2, ஏகே62 உள்ளிட்ட சரவெடி படங்கள் லைன் அப்பில் உள்ளன. எப்படி இத்தனை பெரிய படங்களின் ஒட்டுமொத்த ஆல்பத்தையே ஹிட்டாக கொடுக்க முடிகிறது என அனிருத்தின் சீக்ரெட்டை அறிய பல இசையமைப்பாளர்களே முயற்சி செய்து வருகின்றனர்.

மீண்டும் இணைந்த டிஎன்ஏ

மீண்டும் இணைந்த டிஎன்ஏ

தனுஷ் மற்றும் அனிருத்தின் கூட்டணியை டிஎன்ஏ கூட்டணி என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கடைசியாக தங்கமகன் படத்திற்கு பிறகு அந்த கூட்டணி சில காரணங்களுக்காக முறிந்தது. இந்நிலையில், மீண்டும் திருச்சிற்றம்பலம் படத்தின் மூலம் இணைந்துள்ளது. தொடர்ந்து இந்த கூட்டணி இனி வரும் படங்களில் தொடரும் என்கிற வாக்குறுதியை இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டதன் மூலம் இருவரும் அளித்துள்ளனர்.

இசை வெளியீட்டு விழா ஒளிபரப்பு

இசை வெளியீட்டு விழா ஒளிபரப்பு

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள திருச்சிற்றம்பலம் படத்துக்கு இசை வெளியீட்டு விழா கடந்த வாரம் நடைபெற்ற நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 3 மணிக்கு சன் டிவியில் இந்த ஆடியோ லாஞ்ச் ஒளிபரப்பாக உள்ளது. இயக்குநர் வெற்றிமாறன் மீண்டும் தனுஷ் உடன் இணையப் போகும் அப்டேட், செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் 2 பட அப்டேட் சொன்னது, தனுஷ் மற்றும் அனிருத் ஒன்றாக இணைந்து பாடி அசத்தியது என ஏகப்பட்ட சுவாரஸ்யங்களை காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

வித்தியாசமான புரமோ

வித்தியாசமான புரமோ

திருச்சிற்றம்பலம் இசை வெளியீட்டு விழா புரமோவை விஜய் டிவி பாணியில் வித்தியாசமாக தற்போது சன் டிவி வெளியிட்டுள்ளது. வகுப்பறையில் மாணவர்களுக்கு a2 + b2= ? என கேட்க DNA என மாணவர்கள் பதிலளித்து தாய்க் கிழவி பாடலுக்கு நடனம் ஆடுவது போல அமைந்துள்ள புரமோ தற்போது டிரெண்டாகி வருகிறது. வாத்தி படத்துக்கு இப்படியொரு வகுப்பறை புரமோ பண்ணியிருக்கலாம். திருச்சிற்றம்பலம் படத்தில் டெலிவரி பாய் தானே தனுஷ் என்று ட்ரோல்களும் பறக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X