“தனுஷின் வடசென்னை 2 எப்போ வரும்”: ரசிகர்கள் கேள்விக்கு இயக்குநர் வெற்றிமாறன் சொன்ன பதில் தெரியுமா?
சென்னை: தனுஷ் நடித்துள்ள 'திருச்சிற்றம்பலம்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
தனுஷ், அனிருத், இயக்குநர் மித்ரன் ஆர். ஜவஹர் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் இதில் கலந்துகொண்டனர்.
அப்போது சிறப்பு விருந்தினராக வந்திருந்த இயக்குநர் வெற்றிமாறனிடம் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு, அவர் சூப்பரான பதில் ஒன்றைக் கூறியுள்ளார்.

பொல்லாதவன் கூட்டணி
பாலுமகேந்திரா இயக்கிய 'அது ஒரு கனா காலம்' படத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்திருந்தார். அதில், பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய வெற்றிமாறனுக்கும் தனுஷுக்கும் இடையே நெருங்கிய நட்பு ஏற்படுகிறது. அதுவே அவர்கள் கூட்டணியில் 'பொல்லாதவன்' திரைப்படமும் உருவாக காரணமாகிறது. தனுஷுக்கு அதுவரை இல்லாத பெரிய வெற்றியை இந்தப் படம் பெற்றுக் கொடுத்தது.

அடித்து ஆடிய ஆடுகளம் .
'பொல்லாதவன்' படத்தின் வெற்றியும், ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பும், தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியை மீண்டும் 'ஆடுகளம்' படத்தில் இணைத்தது. இந்தமுறையும் அடித்து ஆடிய இக்கூட்டணி, 'ஆடுகளம்' படம் மூலம் தேசிய விருதுகளையும் சூறையாடியது. அதேபோல் இருவரும் இணைந்து 'காக்கா முட்டை', 'விசாரணை'' ஆகிய தரமான படங்களையும் தயாரித்தனர்.

வடசென்னை - அசுரன்
தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி என்றாலே, ரசிகர்கள் வெறித்தனமாக மாறிவிடும் அளவிற்கு, இருவரும் சேர்ந்து தரமான சம்பவங்களை அரங்கேற்றினர். 'ஆடுகளம்' படத்தைத் தொடர்ந்து 'வடசென்னை' படத்திலும் மிரட்டலான மேக்கிங்கால் ரசிகர்களை துவம்சம் செய்திருந்தனர் தனுஷும் வெற்றிமாறனும். அடுத்து 'அசுரன்' படத்திலும் அசுரத்தனமாக மாஸ் காட்டி அசர வைத்தனர்.
Recommended Video

வடசென்னை 2?
இந்நிலையில், தனுஷ் நடித்துள்ள 'திருச்சிற்றம்பலம்' படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியில், இயக்குநர் வெற்றிமாறனும் கலந்துகொண்டார். அப்போது 'வடசென்னை 2' படம் எப்போது வரும் என ரசிகர்கள் ரொம்பவே ஆர்வத்துடன் கேள்வியெழுப்பினர். வெற்றிமாறன் தற்போது சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் 'விடுதலை' படத்தை இயக்கி வருகிறார். அடுத்ததாக சூர்யா நடிக்கும் 'வாடிவாசல்' படத்தை இயக்கவுள்ளார். இதனை குறிப்பிட்ட இயக்குநர் வெற்றிமாறன், இந்த இரண்டு படங்களையும் முடித்துவிட்டு அடுத்து 'வடசென்னை 2' தான் ரசிகர்களுக்கு உறுதியளித்தார்.


Click it and Unblock the Notifications











