twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சூர்யா ரசிகர்களுக்கு செம ட்ரீட் இருக்கு.. சூரரைப் போற்று டிரைலர் எப்போ ரிலீஸ் தெரியுமா?

    |

    சென்னை: சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த ஹாட் அப்டேட் வெளியாகி உள்ளது.

    Recommended Video

    Putham Pudhu Kaalai Anthology Launch | Amazon Prime 5 Great Directors

    இந்த ஆண்டு ஜனவரி மாதமே சூர்யாவின் சூரரைப் போற்று டீசர் வெளியாகி ரசிகர்களை மிரட்டி இருந்தது.

    அமேசான் பிரைமில் இம்மாத இறுதியில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி உள்ள சூரரைப் போற்று வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    சூர்யா.. விஜய் சேதுபதியை தொடர்ந்து ஓடிடியில் ரிலீஸாகும் மேலும் ஒரு பிரபல நடிகரின் படம்! சூர்யா.. விஜய் சேதுபதியை தொடர்ந்து ஓடிடியில் ரிலீஸாகும் மேலும் ஒரு பிரபல நடிகரின் படம்!

    ரிலீஸ் தேதி மாற்றம்

    ரிலீஸ் தேதி மாற்றம்

    2020ம் ஆண்டு தமிழ் சினிமாவில் பல பெரிய படங்கள் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சம்மர் ரிலீசாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த மாஸ்டர், சூரரைப் போற்று, பூமி, ஜகமே தந்திரம், மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட படங்களின் ரிலீஸ் தேதி இஷ்டத்துக்கு தள்ளிப் போயுள்ளது.

    காலத்தின் கட்டாயம்

    காலத்தின் கட்டாயம்

    ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படம் அமேசான் பிரைமில் வெளியாகும் போது ஏகப்பட்ட சர்ச்சைகள் கிளம்பின. அப்போது, சூரரைப் போற்று திரைப்படம் தியேட்டரில் தான் வெளியாகும் என வாக்குறுதி அளித்து இருந்தார் சூர்யா. ஆனால், அதன் பிறகு காலத்தின் கட்டாயம் எனக் கூறி அமேசான் பிரைமுக்கு இந்த படத்தை விற்று விட்டார்.

    டிரைலர் எப்போ

    டிரைலர் எப்போ

    வரும் அக்டோபர் 30ம் தேதி சூரரைப் போற்று திரைப்படம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், டிரைலர் ரிலீஸ் பண்ணுங்க என்கிற கோரிக்கையை ரசிகர்கள் முன் வைத்து வந்தனர். இந்நிலையில், வரும் அக்டோபர் 15ம் தேதி சூரரைப் போற்று டிரைலர் வெளியாகும் என்ற ஹாட் அப்டேட் வெளியாகி உள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிகிறது.

    தியேட்டரில் ரிலீசாக வாய்ப்பிருக்கா

    தியேட்டரில் ரிலீசாக வாய்ப்பிருக்கா

    வரும் அக்டோபர் 15ம் தேதி முதல் நாடு முழுவதும் தியேட்டர்கள் திறக்கப்படும் என்கிற அறிவிப்பு வெளியாகி உள்ளதால், சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் ஒடிடி ரிலீஸ் உடன் சேர்த்து தியேட்டர்களிலும் வெளியாகுமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. இன்று வெளியான சைலன்ஸ் மற்றும் க/பெ. ரணசிங்கம் படங்கள் வெளிநாடுகளில் தியேட்டர்களில் வெளியாகி உள்ள நிலையில், சூரரைப் போற்று படமும் ரிலீசாகும் என்றே தெரிகிறது.

    English summary
    Suriya’s Soorarai Pottru trailer will release on next weeks time a latest buzz circulates on social media. Also the movie will get a theatrical release talks also going.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X