பிரமாண்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன்.. 'இந்தியன் 2' ஷூட்டிங் எப்போது? படக்குழு பரபர திட்டம்!

By

சென்னை: கமல்ஹாசனின் இந்தியன் 2 படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது என்ற தகவல் தெரியவந்துள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரண்டு வேடங்களில் நடித்து, 1996 ஆம் ஆண்டு வெளியான படம் 'இந்தியன்'.

மனிஷா கொய்ராலா, ஊர்மிளா மடோன்கர், சுகன்யா, நெடுமுடிவேணு, கவுண்டமணி உள்பட பலர் நடித்திருந்த இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது.

காஜல் அகர்வால்

காஜல் அகர்வால்

இதன் இரண்டாம் பாகத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார். சித்தார்த், நெடுமுடிவேணு, காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், டெல்லி கணேஷ் உள்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கிறார். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். இதன் ஷூட்டிங் தொடர்ந்து நடந்து வந்தது.

3பேர் பலியான விபத்து

3பேர் பலியான விபத்து

கடந்த பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி நசரத்பேட்டை அருகேயுள்ள, ஈவிபி பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடந்தபோது, ராட்சத கிரேன் அறுந்து கீழே விழுந்தது. இதில், உதவி இயக்குநர் கிருஷ்ணா (34), ஆர்ட் அசிஸ்டென்ட் சந்திரன் (60), புரொடக்‌ஷன் அசிஸ்டென்ட் மது (29) ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் பலர் பலத்த காயமடைந்தனர்.

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ்

இந்த விபத்து சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. பின்னர் கொரோனா வைரஸ் காட்டுத்தீயாகப் பரவியது. அதைக் கட்டுப்படுத்த லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. இதனால் கடந்த 5 மாதமாக சினிமா ஷூட்டிங் நடத்தப்படவில்லை.

ஜனவரி மாதத்துக்குள்

ஜனவரி மாதத்துக்குள்

இப்போது அரசு, லாக்டவுனில் தளர்வுகளை அறிவித்துள்ளது. சில வழிகாட்டுதல்களுடன் குறைவான நபர்களை வைத்து படப்பிடிப்புகளை நடத்திக் கொள்ள அனுமதி வழங்கி உள்ளது. இருந்தும் பெரிய ஹீரோ படங்களின் படப்பிடிப்புகள் தொடங்கவில்லை. இதற்கிடையே, ஜனவரி மாதத்துக்குள் இந்தியன் 2 படத்தை முடித்துவிட கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளாராம்.

வாய்ப்பில்லை

வாய்ப்பில்லை

அடுத்த வருடம் தேர்தல் வேலைகளில் அவர் கவனம் செலுத்த இருப்பதாகவும் அதற்குள் இந்தப் படத்தை முடித்துவிட அவர் தயாரிப்பு தரப்பில் கூறிவருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. இதுபற்றி இந்தியன் 2 படக்குழுவிடம் விசாரித்தபோது, இப்போது இந்தப் படத்தின் ஷூட்டிங்கை தொடங்க வாய்ப்பில்லை என்று தெரிவித்தது.

பிக் பாஸ் நிகழ்ச்சி

பிக் பாஸ் நிகழ்ச்சி

'கமல்ஹாசன் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கிறார். நூறு நாட்கள் அந்த நிகழ்ச்சி நடக்கும். இதை முடித்துவிட்டு அவரால் ஜனவரி மாதம்தான் வரமுடியும். இதற்கிடையே இந்தியன் 2 படத்தில் மேக்கப் மேன் உள்பட பலர் ஹாலிவுட் டெக்னீஷியன்கள். அவர்களால் இப்போது உடனடியாக இங்கு வர இயலாது. இதனால் இதன் ஷூட்டிங் ஜனவரிக்குப் பிறகு தொடங்க வாய்ப்பிருக்கிறது' என்று கூறினர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X