தளபதி விஜய்யின் பீஸ்ட் படத்தின் அடுத்த ஷெட்யூல் எப்போ தொடங்குது தெரியுமா? வெளியான மாஸ் அப்டேட்!
சென்னை: ஜார்ஜியாவில் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், பீஸ்ட் படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் விரைவில் ஆரம்பமாக உள்ளது.
Recommended Video
கடந்த மாதமே தொடங்க வேண்டிய தளபதி விஜய்யின் 65 வது படப்பிடிப்பு கொரோனா பரவல் காரணமாக போடப்பட்ட லாக்டவுனால் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், மீண்டும் படப்பிடிப்பு எப்போது துவங்கப் போகிறது என்கிற சூப்பர் அப்டேட் கிடைத்துள்ளது.

சாதனை படைத்த பீஸ்ட்
ரொம்ப ரேராகவே தனது ட்விட்டர் பக்கத்தை நடிகர் விஜய் பயன்படுத்தினாலும் அவர் பதிவிடும் ஒவ்வொரு போஸ்ட்டும் சாதனை படைக்கும் போஸ்ட்டாகவே மாறி வருகிறது. பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் விஜய் வெளியிட்ட பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் 2 லட்சத்து 93 ஆயிரம் லைக்குகளை அள்ளியது. இரண்டாவது லுக் 2 லட்சத்து 44 ஆயிரம் லைக்குகளை அள்ளியது.

ஜார்ஜியாவில்
சன் பிக்சர்ஸ் ஸ்டூடியோவில் தளபதி 65 படத்தின் பூஜை போடப்பட்ட நிலையில், ஜார்ஜியாவில் முதல் கட்ட படப்பிடிப்பு துவங்கியது. நடிகர் விஜய், இயக்குநர் நெல்சன் உள்ளிட்ட ஒரு சின்ன யூனிட் மட்டுமே அங்கு சென்று படப்பிடிப்பை நடத்தி விட்டு சென்னை திரும்பினர்.

ஷாப்பிங் மால்
சென்னையில் இரண்டாவது ஷெட்யூல் படப்பிடிப்பை நடத்த தனியாக ஒரு ஷாப்பிங் மால் செட் போடப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின. கடந்த மாதமே சென்னையில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் கொரோனா பரவல் ஒட்டுமொத்த படப்பிடிப்புக்கும் தடை போட்டு விட்டது.

பிறந்தநாள் கொண்டாட்டம்
நடிகர் விஜய்யின் 47வது பிறந்தநாள் ஜூன் 22ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பாலிவுட் நடிகர் நீல் நிதின் முகேஷ் முதல் மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மோகன்லால் வரை பல பிரபலங்களும் நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

ஷூட்டிங் எப்போ
கையில் துப்பாக்கி வாயில் புல்லட் என பீஸ்ட் லுக்கிலேயே ஷூட்டிங்கிற்கு ரெடியாகி விட்டார் விஜய். கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், மீண்டும் படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கும் நிலையில் வரும் ஜூலை 1 முதல் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் போடப்பட்டிருக்கும் பிரம்மாண்ட ஷாப்பிங் மால் செட்டில் படமாக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

வெயிட்டிங்கில் பூஜா
சென்னையில் நடைபெற உள்ள இரண்டாம் கட்டப் படப்பிடிப்பில் நடிகை பூஜா ஹெக்டே கலந்து கொள்ள மிகவும் ஆர்வமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், நடிகை அபர்ணா தாஸும் விரைவில் பீஸ்ட் பட படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











