குட்டி ஸ்டோரிக்கு சூப்பர் ரெஸ்பான்ஸ்.. முடியுது ஷூட்டிங்.. ஏப்ரல் கொண்டாட்டத்துக்கு 'மாஸ்டர்' ரெடி!

By

Recommended Video

Master - Kutti Story | Lokesh Kanagaraj | Anirudh Ravichandran | Thalapathy Vijay

சென்னை: மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் முடிவடைவதை அடுத்து படத்தை ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்யும் வேலையில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம், மாஸ்டர். இதில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் உட்பட பலர் நடிக்கின்றனர்.

சேவியர் பிரிட்டோவின் எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசை அமைக்கிறார்.

நடிகர் விஜய் லுக்

நடிகர் விஜய் லுக்

இந்தப் படத்தின் விஜய் மற்றும் விஜய் சேதுபதி லுக் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றன. பின்னர் வெளியிடப்பட்ட விஜய்யின் மற்றொரு லுக்கும் வைரலானது. அதையும் ரசிகர்கள் டிரெண்டாக்கினர். இதையடுத்து இந்தப் படத்துக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. இதன் ஷூட்டிங்
கர்நாடக மாநிலம் ஷிவமோகாவில் நடந்தபோது, விஜய் சேதுபதி நடிக்கும் காட்சிகள் லீக் ஆனது.

லீக் ஆகவில்லை

லீக் ஆகவில்லை

இதனால் படப்பிடிப்புத் தளத்துக்குள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. பலத்த பாதுகாப்புடன் ஷூட்டிங் நடந்ததால் மற்ற காட்சிகள் ஏதும் லீக் ஆகவில்லை. நெய்வேலியில் இதன் ஷூட்டிங் நடந்தபோது நடிகர் விஜய்யிடன் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அங்கு ஏராளமாக கூடிய ரசிகளுடன் நடிகர் விஜய் எடுத்த செல்பி வைரலானது.

பாடல் டிரெண்ட்

பாடல் டிரெண்ட்

இந்நிலையில் இந்தப் படத்தின் முதல் பாடலான குட்டி ஸ்டோரி, வெளியிடப்பட்டது. இந்தப் பாடல் வரிகள், ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் வைரலாக ஷேர் செய்யப்பட்டது. இதனால் இந்தப் பாடல் டிரெண்ட் ஆனது. பாடல் வெளியான 16 மணி நேரத்திலேயே 6 மில்லியன் வியூக்களை கடந்து சாதனை படைத்தது. இப்போதும் டிரெண்டிங்கில் அது நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது.

போஸ்ட் புரொடக்‌ஷன்

போஸ்ட் புரொடக்‌ஷன்

இந்நிலையில் இந்தப் படத்தின் ஷூட்டிங் பெரும்பாலும் முடிந்துவிட்டது. வரும் 28 ஆம் தேதியுடன் மொத்த படப்பிடிப்பும் முடிவடைவதாகக் கூறப்படுகிறது. மாளவிகா மோகனன் நடிக்கும் காட்சிகளை இன்னும் 2 நாட்கள் படமாக்க உள்ளனர். அதோடு படம் முடிகிறது. போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் ஒரு பக்கம் நடந்து வருகிறது. இதையடுத்து ஏப்ரல் 9 ஆம் தேதி ரிலீஸ் செய்யும் வேலைகளில் படக்குழு இறங்கியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X