Just In
- 7 hrs ago
கொல மாஸ்.. சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் ‘குட்டி ஸ்டோரி’ பாடும் விஜய்.. வெளியானது வீடியோ பாடல்!
- 8 hrs ago
டைட்டான டிரஸ்ஸில் மெட்ராஸ் பட நடிகையின் அசத்தல் லுக்!
- 8 hrs ago
செவுத்துல பல்லி மாதிரி ஒட்டிக்கிட்டு சமந்தா கொடுத்த கலக்கலான கிறங்க வைக்கும் போஸ்!
- 8 hrs ago
ஆக்ட்ரஸ் ரோஷினி கிட்ட பந்தா கிடையாது காஸ்டியும் டிசைனர் ப்ரீத்தியின் முதல் பேட்டி
Don't Miss!
- News
சங்கமம் கலைநிகழ்ச்சிகளுடன் இன்று மினசோட்டா தமிழ் சங்கத்தின் பொங்கல் விழா!
- Automobiles
டாடா ஹாரியர் காரின் விற்பனை அமோகம்... அடுத்து இந்திய சந்தையை கலக்க வருகிறது புதிய சஃபாரி...
- Sports
தம்பிகளா.. அப்படி ஓரமா போய் உட்காருங்க.. இளம் வீரர்களுக்கு நோ சான்ஸ்.. இந்திய அணி முடிவு!
- Finance
யூனியன் பட்ஜெட் 2020-க்காக சிறப்பு ஆப்.. மோடி அரசின் புதிய டிஜிட்டல் சேவை..!
- Lifestyle
எல்லோரும் விரும்பும் கூட்டாளராக நீங்க இருக்க என்ன பண்ணனும் தெரியுமா?
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
எப்போவும் பின்னாடியே பேசுறீங்களே? எப்போ முன்னாடி பேசப் போறீங்க ரம்யா? சவுக்கடி கேள்வி கேட்ட காலர்!
சென்னை: பிக்பாஸில் ரம்யாவிடம் பேசிய காலர், அவர் போட்டியாளர்களின் முதுகுக்கு பின்னால் புறணி பேசுவது குறித்து தடாலடியாய் கேட்டு செம சவுக்கடி கொடுத்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய முதல் சில வாரங்கள், எல்லோருக்கும் பிடித்தமான போட்டியாளராக இருந்தார் ரம்யா பாண்டியன்.
எப்போதும் சிரித்தப்படியே எல்லோருக்கும் பின்னால் புறணி பேசி வந்தார். தான் புறணி பேசுவது மட்டுமின்றி மற்ற ஹவுஸ்மேட்டுகளையும் தூண்டி விட்டு வந்தார்.

ஆரியை கட்டம் கட்டி
பாலாஜியை போலவே ரம்யாவுக்கும் ஆரியை கண்டால் பிடிக்கவில்லை. ஆரிக்கு எந்த பிரச்சனை வந்தாலும் உடனே எதிர் அணியினருடன் சேர்ந்து கொண்டு ஆரியை கட்டம் கட்டி பேசி வந்தார்.

நரி.. விஷம்
மற்றவர்களை ஆரிக்கு எதிராக தூண்டி விட்டு வந்ததாலும் புறணி பேசியதாலும் அவரை கழுவி ஊற்றி வந்தனர் நெட்டிசன்ஸ். குள்ள நரி, விஷம், பாய்சன், விஷப்பூச்சி என பல பெயர்களை வைத்து கழுவி ஊற்றி வந்தனர்.

காலர் செக்மென்ட்
பிக்பாஸ் வீட்டில் ஆரி வாய்யை திறக்கவே கூடாது என்று தடை விதிக்காத குறையாக இருந்து வருகிறார். இந்நிலையில் இந்த வாரம் காலர் செக்மெண்டில் பொள்ளாச்சியில் இருந்து சிலம்பரசன் என்பவர் கால் செய்தார்.

உங்களைதான் பிடிக்குது
ரம்யாவிடம் பேச விருப்பப்பட்ட அவர் முன்னதாக கமல்ஹாசனிடம் பேசினார். அப்போது நிறைய தொகுப்பாளர்கள் இருக்கிறார்கள். ஆனால் நீங்கள் தொகுத்து வழங்குவதுதான் பிடித்திருக்கிறது.

உங்களை மிஸ் பண்றோம்
உங்களின் தமிழ் உச்சரிப்பு பிடித்துள்ளது. ஆனால் கடந்த சில வாரங்களாக உங்கள் நான் என்று நீங்கள் சொல்வதை மிஸ் பண்றோம் என்றார். உடனே கமல், உங்கள் நான் என்று கூறிவிட்டு எப்படி சொல்லாமல் இருப்பேன் என்றார்.

எப்போ முன்னாடி பேசுவீங்க?
தொடர்ந்து ரம்யாவிடம் பேசிய காலர், நல்லா விளையாடுறீங்க. ஆனால் குழந்தை மருத்துவர் போலதான் இன்னமும் இருக்கீங்க. எல்லாத்தையும் பின்னாடியே பேசுறீங்களே.. எப்போ ஆரி போல நெத்தியில அடிச்சா மாதிரி முன்னாடி பேச போறீங்க என்று கேட்டார்.

மூஞ்சுக்கு நேரா சொல்றேன்
அதனைக் கேட்ட ரம்யா நீங்க சொல்லிதான் எனக்கு இது தெரியுது. இதனாலதான் எல்லாரும் சேஃப் கேம் விளையாடுறேன் சொல்றாங்க போல. இனிமே மூஞ்சுக்கு நேரா சொல்றேன் என்று கூறினார்.

ஆரியை பத்தி பேசினது
தொடர்ந்து டைனிங் டேபிளில் அமர்ந்து ஷிவானியும் ரம்யாவும் காலர் குறித்து பேசினர். அப்போது நீங்க எப்போ பின்னாடி பேசுனீங்க என்று ஷிவானி கேட்க, ஆரியை பத்தி பேசினத சொல்றாங்க போல என்று ஒத்துக்கொண்டார் ரம்யா.

கவனிக்கவில்லையே
அப்போது ஆரி போல எப்போ முகத்துக்கு முன்னாடி பேசப் போறீங்க என்று கேட்கிறார். உங்களுக்கு வந்த காலரும் ஆரியை போன்றே ஹின்ட் கொடுத்துள்ளார் என்றும் காலர் பேசியதை ரம்யாவுக்கு நினைவு படுத்தினார் ஷிவானி. அதனைக் கேட்ட ஷிவானி அப்படியா, ஆரி போல் என்றாரா நான் கவனிக்கவில்லையே என்றார்.

சம்பவங்கள் இருக்கும்
இதனை தொடர்ந்து இந்த வாரமும் பாலாஜி மற்றும் ரம்யா ஆரியை வச்சு செய்வார்கள் என தெரிகிறது. இதனால் இந்த வாரமும் சில பல சம்பவங்கள் இருக்கும் என்றும் ரசிகர்கள் இப்போதே பேச தொடங்கிவிட்டனர்.