Don't Miss!
- News
புதன் பெயர்ச்சி பலன் 2023: மகரத்தில் சூரியன் புதன் கூட்டணி..இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்
- Sports
"நீங்க கொஞ்சம் முன்னேறனும்பா".. ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட்.. விராட் கோலிக்கு கங்குலி முக்கிய அட்வைஸ்!
- Lifestyle
ஒன்றரை இலட்சம் ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட தாய்லாந்து பெண்... அப்படி அவர் செய்த குற்றம் என்ன தெரியுமா?
- Automobiles
நம்பவே முடியல... படத்தில் உள்ள இந்த பைக்கிற்கு இப்படியொரு வரலாறு உள்ளதா!! முழு விபரம்...
- Technology
புண்பட்ட நெஞ்சை FREE டேட்டாவை வச்சு தேத்திக்கோங்க.. Vodafone அறிவித்துள்ள "அடேங்கப்பா" ஆபர்!
- Finance
சென்செக்ஸ் 670 புள்ளிகள் சரிவு.. 2 முக்கியக் காரணம்..!!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
தனிமை என்னை வாட்டும் போது இதை தான் செய்வேன்.. கன்னிகா ரவி வெளியிட்ட வீடியோவால் மிரண்டு போன ரசிகர்கள்!
சென்னை: தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான பாடலாசிரியராக இருப்பவர் தான் சினேகன். கிட்டத்தட்ட 2500 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார்.
Recommended Video
தமிழில் ஹிட்டான பல சூப்பர் ஹிட் பாடல்களையும் எழுதியுள்ளார் சினேகன்.
சினேகனின் மனைவியான கன்னிகா ரவி தனிமையில் இருக்கும் பொழுது என்ன செய்வார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.
போதும் போதும் லிஸ்ட் பெருசா போகுது.. எனக்கு இது தான் பிடிக்கும் லிஸ்ட் போட்ட பிரியா பவானி சங்கர்!

பெயர் தெரியாத ஹிட் பாடல்கள்
தமிழ் சினிமாவில் பிரபல பாடலாசிரியர் சினேகன் பல ஹிட்டான பாடல்களை எழுதியுள்ளார். பாடலாசிரியர் சினேகன் மௌனம் பேசியதே படத்தில் என் அன்பே என் அன்பே, சாமி படத்தில் கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா, பருத்திவீரன் படத்தில் அனைத்து பாடல்களையும் எழுதியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இது மட்டும் இல்லாமல் சூர்யா நடிப்பில் சூப்பர் ஹிட்டான சூரரை போற்று படத்தில் காட்டுப் பயலே பாடல் என்று பல ஹிட்டான பாடல்களை எழுதியுள்ளார். இவர் தான் எழுதினாரா என்று பெயர் தெரியாமலேயே பல ஹிட் பாடல்கள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

10 வருட காதல்
இவர் கிட்டத்தட்ட 2500க்கு மேல் பாடல்கள் எழுதியுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக சினேகன் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சி மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானார் சினேகன். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பத்து ஆண்டுகளாக தான் காதலித்து வந்த கன்னிகா ரவி என்ற நடிகையை திருமணம் செய்து கொண்டார் சினேகன். பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு இவர்களின் திருமணம் மிகவும் விமர்சையாக நடைபெற்றது. நடிகர் கமலஹாசன் இவர்கள் திருமணத்தில் கலந்து கொண்டு தாலி எடுத்துக் கொடுத்து ஆசீர்வாதம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சில படங்களில் நடித்த கன்னிகா
கல்யாண வீடு என்ற தொடரில் நடித்த நடிகை கன்னிகா ரவி சில படங்களிலும் நடித்துள்ளார். காதல் ஜோடிகளாக இருந்து கொண்டிருக்கும் இவர்கள், பல நிகழ்ச்சிகளிலும் ஒரே மாதிரியான கலர் உடைகளில் பங்கேற்று அனைவரையும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தி வருகின்றனர். திருமணத்திற்கு பிறகு கன்னிகா என்ன செய்து கொண்டு இருக்கிறார் என்று பலர் கேட்டு வந்த நிலையில், தனிமையில் இருக்கும் பொழுது கன்னிகா ரவி என்ன செய்கிறார் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

ஓவியராக கன்னிகா
சமூகவலைதள பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடிய கன்னிகா ரவி அடிக்கடி தனது போட்டோ ஷூட் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு அசத்தி வருகிறார். தனிமையில் இருக்கும் பொழுது ஓவியம் வரைவதை தனது பொழுதுபோக்காக செய்து வருகிறார். அச்சு அசல் நேரில் பார்க்கும் சீனரிகளைப் போலவும், பல உருவங்களையும் வரைந்து அசத்தி வருகிறார் கன்னிகா. இந்த வீடியோக்களும், புகைப்படங்களும் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றது. இப்படி ஒரு திறமையா என்று ரசிகர்கள் பலர் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.