கோச்சடையான் விழா முடிந்த கையோடு ஷாருக்கும், தீபிகாவும் அவசரமாக எங்கே சென்றார்கள்?
சென்னை: கோச்சடையான் இசை வெளியீட்டு விழா முடிந்த கையோடு பாலிவுட் நடிகர் ஷாருக்கானும், நடிகை தீபிகாவும் அவசரமாக மும்பைக்கு கிளம்பிச் சென்றனர்.
ரஜினிகாந்தின் கோச்சடையான் இசை வெளியீட்டு விழா நேற்று சத்யம் சினிமாஸில் நடைபெற்றது. இந்த விழாவில் ஷாருக்கான், படத்தின் ஹீரோயின் தீபிகா படுகோனே உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விழா முடிந்த உடன் ஷாருக்கானும், தீபிகாவும் அவசரமாக மும்பை கிளம்பிச் சென்றனர்.

ஜூஹி சாவ்லா
ஷாருக்கானின் தோழியும், நடிகையுமான ஜூஹி சாவ்லாவின் சகோதரர் பாபி சாவ்லா நேற்று காலை 7 மணிக்கு மரணம் அடைந்தார். சுமார் 3 ஆண்டுகளுக்கு மேலாக கோமாவில் இருதவர் உயிர் இழந்தார்.

இறுதிச் சடங்கு
பாபி சாவ்லாவின் இறுதிச் சடங்கு நேற்று மாலை 6 மணி அளவில் மும்பையில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள தான் ஷாருக்கும், தீபிகாவும் அவசரமாக மும்பை திரும்பினர்.

ஷாருக்கான்
ஷாருக்கான் பாபி சாவ்லாவின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். பாபியின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திப்பதாக அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ஃபரா கான்
ஷாருக்கானின் நெருங்கிய தோழியும், இயக்குனருமான ஃபரா கான் பாபியின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டார்.

ஆறுதல்
சகோதரரை இழந்து வாடும் ஜூஹி சாவ்லாவுக்கு ஆதரவாக இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட ஷாருக் தோழியை முத்தமிட்டு ஆறுதல் கூறுகிறார்.


Click it and Unblock the Notifications











